ஆட்டத்திற்குள் புகுந்த iQOO.. சாம்சங், ஒன்பிளஸ்-க்கு புது போட்டி.. 12.95-இன்ச் டிஸ்பிளே உடன் புது டேப்லெட்!
அடுத்த சில வாரங்களில் டேப்லெட் சந்தையானது புதிய மாடல்களின் அறிமுகத்தால்நிரம்பி வழியும் என்பது போல் தெரிகிறது. ஹானர் நிறுவனம் அதன் ஹானர் பேட் எக்ஸ்9ஏ டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ள நிலையில், விவோ நிறுவனம் அதன் விவோ பேட் 4 ப்ரோ (Vivo Pad 4 Pro) மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
கூடவே ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ பேட் 4 ப்ரோ (Oppo Pad 4 Pro) மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதேபோல ஷாவ்மீ நிறுவனமும் அதன் ஷாவ்மீ பேட் 7எஸ் ப்ரோ (Xiaomi Pad 7s Pro) மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதெல்லாம் பார்த்து டேப்லெட் மார்க்கெட்டின் கிங் ஆன சாம்சங் சும்மா இருக்குமா?

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ (Samsung Galaxy Tab S10 FE) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் (Samsung Galaxy Tab S10 FE Plus) டேப்லெட்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. போதாக்குறைக்கு ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ (OnePlus Pad 2 Pro) அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
இப்படி விவோ தொடங்கி ஒன்பிளஸ் வரையிலாக பல நிறுவனங்கள் தத்தம் புதிய டேப்லெட்களின் அறிமுகத்தை திட்டமிட்டுள்ள நிலையில் ஐக்யூ நிறுவனமும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. அது ஐக்யூ பேட் 3 ப்ரோ (iQOO Pad 3 Pro) மாடல் ஆகும். இது 12.95-இன்ச் எல்சிடி பேனலுடன் வரும் என்றும், டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
நினைவூட்டும் வண்ணம் டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட் என்பது கடந்த அக்டோபர் 2024 இல் அறிவிக்கப்பட்ட டைமன்சிட்டி 9400 சிப்செட்டின் ஓவர்லாக்டு வெர்ஷன் ஆக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது ஏப்ரல் 11 அன்று நடைபெறவிருக்கும் மீடியாடெக்கின் டைமன்சிட்டி டெவலப்பர் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு வெளியான ஐக்யூ பேட் 2 ப்ரோ (iQOO Pad 2 Pro) மற்றும் விவோ பேட் 3 ப்ரோ (Vivo Pad 3 Pro) ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருந்தன. ஆனால் சிப்செட் வேறுபட்டன. ஐக்யூ மாடலில் டைமன்சிட்டி 9300 பிளஸ் இருந்தது; விவோ மாடலில் டைமன்சிட்டி 9400 சிப்செட் இருந்தது. ஆக இம்முறையும் விவோ பேட் 4 ப்ரோ மாடலின் பெரும்பாலான அம்சங்கள் ஐக்யூ பேட் 3 ப்ரோ மாடலில் இடம்பெறலாம்.
ஹானர் பேட் எக்ஸ்9ஏ டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள்: 11.5-இன்ச் 2.5கே (1504 x 2508 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட், 8ஜிபி ரேம், பயன்படுத்தப்படாத இருந்து ஸ்டோரேஜில் இருந்து 8ஜிபி விர்ச்சுவல் ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், ஆட்டோஃபோகஸ் உடனான 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 8300mAh பேட்டரி மற்றும் 35W பாஸ்ட் சார்ஜிங்கை கொண்டுள்ளது. விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட்டில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது 16 ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 1 TB வரை UFS 4.0 ஸ்டோரேஜை பேக் செய்யலாம். இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 15 க்கான கலர்ஓஎஸ்ஸில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சுமார் 10,000mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டிருக்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோவில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம். ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும். பெரும்பாலும் இது ஒப்போ பேட் 4 ப்ரோவை போலவே இருக்கும். விலை விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications








