Home
Gadgets

சிங்கிள் சார்ஜில் 50 மணி நேர பேக்கப்.. ரூ.1,699 போதும்.. மெகா பேஸ்.. 42எம்எஸ் லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் கேமிங் பிரியர்கள் மற்றும் மியூசிக் பிரியர்களை பட்ஜெட்டில் தட்டித் தூக்கும்படி ஐக்யூ பட்ஸ் (iQOO Buds) வெளியாகி இருக்கிறது. சிங்கிள் சார்ஜில் 50 மணி நேரங்களுக்கு பேக்கப் மட்டுமல்லாமல், 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 4 மணி நேரங்களுக்கு பேக்கப்பும் கிடைக்கிறது. இந்த ஐக்யூ பட்ஸ் மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்க்கலாம்.

ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் மற்றும் ஐக்யூ பட்ஸ் ஆகிய மாடல்கள் இந்தியாவில் வெளியாகி இருக்கின்றன. இதில் பட்ஜெட்டில் ஐக்யூ பட்ஸ் வெளியாகி ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்று இருக்கிறது, ஸ்பாஷியல் ஆடியோ, நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற மியூசிக் பிரியர்களுக்கான பீச்சர்களுடன், லோவ் லேட்டன்சி போன்ற கேமிங் பீச்சர்களையும் கொடுக்கிறது.

சிங்கிள் சார்ஜில் 50 மணி நேர பேக்கப்.. ரூ.1,699 போதும்.. மெகா பேஸ்!

ஐக்யூ பட்ஸ் அம்சங்கள் (iQOO Buds Specifications): 10 எம்எம் ஹை-ரெசொலூஷன் டிரைவர்கள் கிடைக்கின்றன. இதில் டீப்எக்ஸ் 4.0 (DeepX 4.0) சவுண்ட் எபெக்ட் டியூனிங் கிடைக்கிறது. ஆகவே, மெகா பேஸ் (Mega Bass), கிளியர் வாய்ஸ் (Clear Voice), கிளியர் ஹை பிட்ச் (Clear High Pitch) மோட்கள் கிடைக்கின்றன. ஆடியோ புக் மோட் (Audiobook Mode) கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், வழக்கமாக கிடைக்கும் ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) கிடைக்கிறது. கால் நாய்ஸ் ரெடக்சன் (Call Noise Reduction) கொண்ட டூயல் மைக்குகள் கிடைக்கின்றன. இதில், என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ஆம்பியன்ட் உள்ளிட்ட அவுட்டோர் சவுண்ட்களை இது கன்ட்ரோல் செய்து கொடுக்கும்.

கேமிங் பிரியர்களுக்காக 42 எம்எஸ் லோவ் கேமிங் லேட்டன்சி (Low Gaming Latency) கிடைக்கிறது. பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கில் பட்டையை கிளப்பும் மாடலாக இந்த ஐக்யூ பட்ஸ் கிடைக்க இருக்கிறது. சார்ஜிங் கேஸில் 525mAh பேட்டரி மற்றும் பட்களில் 53mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிங்கிள் சார்ஜில் 50 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

பட்களில் மட்டும் 12 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். அதேபோல 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், தொடர்ந்து 4 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும் மாடலாகவும் இந்த ஐக்யூ பட்ஸ் கிடைக்க இருக்கிறது. ப்ளூடூத் 6.1 (Bluetooth 6.1) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. டூயல் சேனல் டிரான்ஸ்மிஷன் 2.0 (Dual Channel Transmission 2.0) கிடைக்கிறது.

10 மீட்டர்கள் வரையில் ரேஞ்ச் கிடைக்கும். வழக்கம்போல டூயல் டிவைஸ் கனெக்சன் (Dual Device Connection) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம். கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) சப்போர்ட் கிடைக்கிறது. ஃபைண்ட் மை இயர்போன்ஸ் (Find My Earphones) ஆப்ஷன் கொடுத்து இருக்கிறது.

பட்ஜெட்டில் வெளியாகினாலும், ஸ்மார்ட் டச் கன்ட்ரோல்கள் (Smart Touch Controls) கிடைக்கின்றன. இந்த ஐக்யூ பட் மாடலின் பட்களுக்கு மட்டும் IP54 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிளேம் எல்லோ (Flame Yellow) கலரில் மட்டுமே இந்த ஐக்யூ பட்ஸ் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

ரூ.1,899 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும், ரூ.200 அறிமுக சலுகை போக ரூ.1,699 விலைக்கு கிடைக்க இருக்கிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த ஐக்யூ பட்ஸ் மாடலுடன் வெளியான ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனும் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO Buds With 50 Hours Playback Launched in India Sale From August 24 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X