Home
Gadgets

அறிமுகமானது புது iQOO 5ஜி போன்.. 7400mAh பேட்டரி.. சோனி கேமரா.. 24ஜிபி ரேம்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ 15 அல்ட்ரா(iQOO 15 Ultra) ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் சிப்செட், ஆக்டிவ் கூலிங் ஃபேன், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஐக்யூ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஐக்யூ 15 அல்ட்ரா அம்சங்கள் (iQOO 15 Ultra specifications): 6.85-இன்ச் 2கே பிளஸ் கர்வ்டு சாம்சங் எம்14 8டி எல்டிபிஒ அமோலெட் ( 2K+ curved Samsung M14 8T LTPO AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஅர் 10 பிளஸ், 1.07 பில்லியன்ஸ் கலர், 8000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளது.

அறிமுகமானது புது iQOO 5ஜி போன்.. 7400mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் (Snapdragon 8 Elite Gen 5 chip) உடன் ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு, Q3 கேமிங் சிப் ஆதரவுகளும் உள்ளன.

ஒரிஜின்ஓஎஸ் 6.0 (OriginOS 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) அடிப்படையாகக் கொண்டு ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி Sony IMX921 மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio)உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

7400எம்ஏஎச் பேட்டரி உடன் ஐக்யூ 15 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போனில் Dome கூலிங் சிஸ்டம் ஆதரவும் உள்ளது.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்தது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பிஇ, குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), ப்ளூடூத் 6.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

அறிமுகமானது புது iQOO 5ஜி போன்.. 7400mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஐக்யூ 15 அல்ட்ரா விலை
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ 15 அல்ட்ரா மாடலின் விலை 5,699 yuan (இந்திய மதிப்பில் ரூ.74,290)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ 15 அல்ட்ரா மாடலின் விலை 5,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.78,220)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஐக்யூ 15 அல்ட்ரா மாடலின் விலை 6,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.91,235)
24ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஐக்யூ 15 அல்ட்ரா மாடலின் விலை 7,699 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,00,370)
வரும் பிப்ரவரி 10-ம் தேதி இந்த ஐக்யூ 15 அல்ட்ரா போன் சீனாவில் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15 Ultra with 7400mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X