பருத்திமூட்டை குடோன்லயே இருக்கட்டும்.. iPhone Pocket அறிமுகம்.. என்ன விலை? அப்படி என்ன ஸ்பெஷல்?
ஆப்பிள் (Apple) நிறுவனமானது ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவுடன் (Issey Miyake) இணைந்து ஐபோன் பாக்கெட் (iPhone Pocket) என்கிற புதிய தயாரிப்பை அறிமுகம் செய்து உள்ளது. ஐபோன் பாக்கெட்டின் பயன் என்ன? விலை நிர்ணயம் என்ன? இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதோ விவரங்கள்:
ஐபோன் பாக்கெட் என்பது ஆப்பிள் ஐபோன் (Apple iPhone), ஆப்பிள் ஏர்பாட்ஸ் (Apple AirPods) மற்றும் பிற சிறிய அத்தியாவசிய பொருட்களை (Small essentials) எடுத்து செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட லிமிடெட் எடிஷன் 3டி-நிட் ஆக்சஸெரீ (Limited edition 3D-knit accessory) ஆகும்.

"துணியின் ஒரு துண்டு" (A piece of cloth) என்ற கான்செப்ட் டில் இருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டுள்ள ஐபோன் பாக்கெட்டின் ஆனது தொழில்நுட்பம் மற்றும் கைவினைத்திறன் ஆகிய இரண்டின் கலவையாகும். மேலும் ஐபோன் பாக்கெட் ஆனது - உலகின் முக்கியமான 2 பிராண்டுகள் எளிமை மற்றும் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதையும் பிரதிபலிக்கிறது.
என்ன விலை? ஐபோன் பாக்கெட்டின்ஷார்ட் ஸ்ட்ராப் வெர்ஷன் (iPhone Pocket Short Strap Version) ஆனது $149.95 க்கு (அதாவது இந்திய ருபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.13,300 க்கு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது லெமன், மாண்டரின், பர்பிள், பிங்க், பீகாக், சபையர், சினமன் மற்றும் பிளாக் என மொத்தம் 8 வண்ணங்களில் வருகிறது.
சற்றே நீளமான ஐபோன் பாக்கெட்டின் க்ராஸ் பாடி வெர்ஷன் (iPhone Pocket Crossbody Version) ஆனது $229.95 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ. 20,400 க்கு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சபையர், சினமன் மற்றும் பிளாக் கலர்களில் வாங்க கிடைக்கும்.
இரண்டு வெர்ஷன்களுமே அனைத்து ஐபோன் மாடல்களுடனும் இணக்கமானது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐபோன் பாக்கெட் ஆனது வருகிற நவம்பர் 14 ஆம் தேதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர்கள் வழியாக வாங்க கிடைக்கும் என்றும், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், கிரேட்டர் சீனா மற்றும் பிற சந்தைகளில் அதிகாரப்பூர்வ ஆப்பிள் வலைத்தளம் மூலம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் பாக்கெட் வடிவமைப்பு மற்றும் பயன்பாடு: ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ஐபோன் பாக்கெட் ஆனது, இஸ்ஸி மியாகேவின் சிக்னேச்சர் ப்ளீட்ஸ்-ஐ நினைவூட்டும் வகையில் 3டி-பின்னிட்ட, ரிப்பட் அமைப்பை கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பு அதை நீட்டவும், விரிவடையவும் அனுமதிக்கும் என்றும், ஐபோனுடன் மற்ற சிறிய பொருட்களுக்கும் இடமளிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை கையடக்கமாகவும் வைத்து கொள்ளும்படி, பைகளில் கட்டப்படும்படி அல்லது உடலில் அணியும்படி - பல வழிகளில் பயன்படுத்தலாம்.
ஆப்பிள் ஐபோன் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை ஐபோன் 18 சீரிஸில் உள்ள அனைத்து பிளாக்ஷிப் மாடல்களிலும் 24 மெகாபிக்சல் செல்பீ கேமராவை (24MP Selfie Camera) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய ஐபோன் 17 சீரிஸில் (iPhone 17 Series) உள்ள 18 மெகாபிக்சல்களில் இருந்து அதிகமாகும்.
இந்த மாற்றம் ஆப்பிளின் செல்பீ கேமரா தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கலாம். மேலும் இந்த மாற்றம் இன்னும் கூர்மையான படங்கள், மேம்படுத்தப்பட்ட குறைந்த-ஒளி செயல்திறன் மற்றும் விரிவான போர்ட்ரெயிட் காட்சிகளை உறுதியளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் துல்லியமாக இருந்தால், குறிப்பிட்ட செல்பீ கேமரா அப்கிரேட் ஆனது ஐபோன் 18 ( iPhone 18), ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro), ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ( iPhone 18 Pro Max), ஐபோன் ஏர் 2 (iPhone Air 2) மற்றும் ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் (Apple first foldable iPhone) ஆகிய அனைத்து மாடல்களிலும் இடம்பெறலாம்.


Click it and Unblock the Notifications








