இதுதான் டிஸ்கவுண்ட்.. ரூ.3300 ரேட் கட்ல பிரீமியம் ஐபாட்.. 11 இன்ச் டிஸ்பிளே.. ட்ரூ-டோன் கேமரா.. எந்த மாடல்?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபாட் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு அமேசான் விற்பனையில் (Amazon Sale) சரியான நேரம் வந்துவிட்டது. 11 இன்ச் ரெடினா ட்ரூ டோன் டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், ஐபாட்ஓஎஸ் 18 மற்றும் ஆப்பிள் எம்3 சிப்செட்டுடன் 2025ஆம் ஆண்டு வெளியான ஐபாட் ஏர் (iPad Air) மாடலுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக கிடைக்கும் இந்த ஐபாட் ஏர் டேப்லெட்டில் முழு பீச்சர்கள் மற்றும் டிஸ்கவுண்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஐபாட் ஏர் டேப்லெட்டின் 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.59,900ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் ஆர்டர் செய்தால் ரூ.3,300 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.56,600 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் வருகிறது.

இதே கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.3,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக ரூ.53,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த 11 இன்ச் டிஸ்பிளே மாடலில் லேட்டஸ்ட் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. இப்போது மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.
ஐபாட் ஏர் அம்சங்கள் (iPad Air Specifications): இந்த பிரீமியம் டேப்லெட்டில் 11 இன்ச் (2360 x 1640 பிக்சல்கள்) ரெடினா ட்ரூ டோன் (Retina True Tone) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் பி3 கலர் காமட் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், ஆன்டி-ரெப்ளெக்டிவ் கோட்டிங் (Anti-reflective Coating) சப்போர்ட் கிடைக்கிறது.
லாக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆப்பிள் எம்3 (Apple M3) சிப்செட் கிடைக்கிறது. 9 கோர் ஜிபியு கிராபிக்ஸ் கார்டு மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் சப்போர்ட் வருகிறது. ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் கிடைப்பதால், லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு ஏற்ப ஐபாட்ஓஎஸ் 18 (iPadOS 18) வருகிறது. 12 எம்பி சிங்கிள் ரியர் கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவில் ஸ்மார்ட் எச்டிஆர் 4 (Smart HDR 4) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. அதேபோல 12 எம்பி அல்ட்ரா வைடு செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த ஷூட்டருக்கு ரெடினா ஃபிளாஷ் (Retina Flash) சப்போர்ட் உள்ளது. அதேபோல ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் கிடைக்கிறது. ஆனால், 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் மட்டுமே வருகிறது.
வீடியோ, ஆடியோ கால்களுக்காக டூயல் மைக்ரோபோன்கள் கிடைக்கின்றன. மல்டி-மீடியாவுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. டச் ஐடி (Touch ID) சப்போர்ட் கிடைக்கிறது. கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 6இ (Wi‑Fi 6E), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), பில்ட்-இன் ஜிபிஎஸ் (Built‑in GPS) மற்றும் ஜிஎன்எஸ்எஸ் (GNSS) வருகிறது.
10 மணி நேரங்களுக்கு லித்தியம் பாலிமர் பேட்டரி கிடைக்கிறது. ப்ளூ (Blue), பர்பிள் (Purple), ஸ்டார்லைட் (Starlight), ஸ்பேஸ் கிரே (Space Grey) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிரீமியம் டேப்லெட் வாங்க வேண்டுமானால், இந்த லேட்டஸ்ட் மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம். இதில் 5ஜி வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications