ஏழைக்கு ஏற்ற Redmi ஸ்பீக்கர்.. மிகவும் குறைந்த விலை.. கையடக்கத்தில் பார்ட்டி பண்ண ஸ்பீக்கர்.. தெறி சவுண்ட்!
ரெட்மி (Redmi) நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் புதிதாக ஒரு ஸ்பீக்கர் சாதனத்தை சேர்த்துள்ளது. இதை ஐபி67 ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் (IP67 Redmi Bluetooth Speaker) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இது குறைந்த விலையில் தெறிக்கவிடும் ஆடியோவை வழங்குகிறது.
சியோமி நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் புதிது புதிதாக பல ஸ்மார்ட் கேட்ஜெட்களை சேர்த்து வருகிறது. அந்த வரிசையில் ரெட்மி நிறுவனம் புதிதாக ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர் (Bluetooth speaker) மாடலை அதன் தயாரிப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த புதிய ஆடியோ வயர்லெஸ் ஸ்பீக்கர் (Audio wireless speaker) சாதனத்தை ரெட்மி மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ஐபி67 ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் (IP67 Redmi Bluetooth Speaker):
குறைந்த விலை என்றதும், இதன் ஆடியோ தரம் சுமாராக தான் இருக்குமென்று நினைத்துவிடாதீர்கள். இந்த புதிய ஐபி67 ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் (IP67 Redmi Bluetooth Speaker) சாதனத்தின் ஆடியோ தரத்தில் ரெட்மி நிறுவனம் எந்தவொரு குறையையும் வைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதில் பல அட்டகாசமான அம்சங்களை கூட ரெட்மி நிறுவனம் இந்த புதிய ஸ்பீக்கர் உடன் இணைத்து வழங்கியுள்ளது.
இந்த புதிய ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Redmi Bluetooth Speaker) சாதனத்தை ஒரு சாதனமாக பயன்படுத்தினால், ஆடியோ குவாலிட்டி அற்புதமாக இருக்கும். அதேபோல், இதனுடன் வரும் ஒரு பிரத்தியேகமான அம்சத்தின் மூலம் மற்றொரு ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கரை பேர் (pair) செய்து இரண்டையும் ஒரே நேரத்தில் பிளே (paly) செய்தால், ஆடியோ குவாலிட்டி அல்டிமேட்டாக (ultimate) இருக்கும் என்று ரெட்மி விளம்பரம் செய்துள்ளது.
ஆம், இது இரண்டு ஸ்பீக்கர்களுக்கு இடையே பேரிங் செய்யும் (dual pairing device) அம்சத்தையும் கொண்டுள்ளது. அதனால், ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களிலும் லோ-லேடன்சி அம்சத்துடன் மிகவும் துல்லியமான மற்றும் சத்தமான ஆடியோவை உங்களால் அனுபவிக்க முடியும். இந்த ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் சாதனம் பார்ப்பதற்கு குட்டியாக இருந்தாலும், இதன் சக்தி இண்டோர் ரூம்களில் (indoor rooms) தெறிக்கவிடுகிறது.

ஐபி67 ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் விலை (IP67 Redmi Bluetooth Speaker Price):
இந்த ஸ்பீக்கர் வெளிப்புறத்தில் ஒரு மென்மையான ரப்பர் பொருள் இணைந்து ஒரு ஃபேப்ரிக் மெஷ் துணி போன்ற தோற்றத்தை பெறுகிறது. இந்த ஸ்பீக்கர் ஐபி67 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் திறன் கொண்டது. இதுஅவுட்டோர் பயன்பாட்டிற்கு ஏற்றது. தெரியாதவர்களுக்கு, IP67 மதிப்பீட்டின்படி, தயாரிப்பு முழுவதுமாக தூசியிலிருந்து பாதுகாக்கப்படும் மற்றும் 100cm ஆழம் வரை 30 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாக நீரில் மூழ்கினாலும் செயல்படும் திறன் கொண்டது என்பதை குறிக்கிறது.
உண்மையை சொல்ல போனால், ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் மழைத்துளிகளால் எந்த பிரச்சனையும் சந்திக்காது. ஸ்பீக்கருடன் ஒரு ஹாண்டில் ஸ்ட்ராப் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 1.5" இன்ச் அளவு கொண்ட மெயின் டிரைவர் உடன் 2 யூனிட் அக்குஸ்டிக் காண்பிகிரேஷன் கொண்ட அம்சங்களை ஆதரிக்கிறது. இது கிரிஸ்டல் கிளியர் ஆடியோ மற்றும் ஸ்ட்ராங் பாஸ் அம்சத்தை கொண்டுள்ளது.
இதன் விலை பற்றி பேசுகையில், இது இந்திய மதிப்பில் ரூ. 1100 அல்லது அதற்கும் குறைவான விலை புள்ளியை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Redmi Bluetooth Speaker) வருகின்ற ஜூன் 14, 2024 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. விரைவில் இது இந்திய சந்தைக்கும் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது மூன்று நிறங்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications








