160 கிராம் மினி பவர் பேங்க்.. 10000mAh பாக்கெட் ராக்கெட்.. ஒரே நேரத்தில் 3 போனுக்கு சார்ஜ்.. எந்த மாடல்?
ஐஎன்ஐயு (INIU) நிறுவனம் ஆனது பாக்கெட் ராக்கெட் பி50 (Pocket Rocket P50) என்கிற புதிய மலிவு விலை பவர் பேங்க் மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் அதன் பாக்கெட் ராக்கெட் பி50 மாடலை உலகின் மிகச்சிறிய 10000எம்ஏஎச் பவர் பேங்க் (World's smallest 10000mAh Power Bank) என்று விளம்பரப்படுத்தி உள்ளது.
அளவீட்டில்இது வெறும் 3.3 x 2 x 1 அங்குலங்கள் (8.3 x 5.2 x 2.6 செ.மீ) மற்றும் எடையில் வெறும் 160 கிராம் மட்டுமே உள்ளது. அதாவது இந்த பிராண்டின் கூற்றுப்படி, பாக்கெட் ராக்கெட் பி50 பவர் பேங்க் ஆனது ஒரு நிலையான 10000எம்ஏஎச் பவர் பேங்கை விட 45% சிறியதாக உள்ளது. இதை எந்த பிரச்சனையும் இல்லாமல் ஜீன்ஸ் பாக்கெட், கைப்பை அல்லது பயணப் பையில் கூட வைக்கலாம்!

அளவில் சிறியதாக இருந்தாலும் கூட பாக்கெட் ராக்கெட் பி50 பவர் பேங்க் ஆனது 10000mAh பேட்டரி திறனை கொண்டுள்ளது மற்றும் இரண்டு யூஎஸ்பி-சி (USB-C) போர்ட்கள் மற்றும் ஒரு யூஎஸ்பி-ஏ (USB-A) உட்பட மொத்தம் மூன்று யூஎஸ்பி போர்ட்கள்ளை கொண்டுள்ளது.மேலும் இவைகளின் வழியாக அதிகபட்சமாக 45W அவுட்புட் கிடைக்கும்
கூடுதலாக, பாக்கெட் ராக்கெட் பி50 பவர் பேங்கில் ஐஎன்ஐயு நிறுவனத்தின் இன்-ஹவுஸ் டைனிசெல் ப்ரோ பேட்டரி தொழில்நுட்பம் உள்ளது. இது தொழில்துறையில் முதன்மையானது என்று ஐஎன்ஐயு நிறுவனம் கூறுகிறது. ஆக இந்த சிறிய பவர் பேங்க் வழியாக ஒரே நேரத்தில் மூன்று டிவைஸ்களை சார்ஜ் செய்ய முடியும்.
ஐஎன்ஐயு நிறுவனத்தின் கூற்றுப்படி, பாக்கெட் ராக்கெட் பி50 பவர் பேங்க் ஆனது ஐபோன் 16 மாடலை முறையே 0 முதல் 100% வரை 2 முறை சார்ஜ் செய்ய முடியும்; இதேபோல ஆப்பிள் ஏர்பாட்ஸ் (Apple AirPods Pro) கேஸை 11.5 முறை அல்லது சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) ஸ்மார்ட்போனை 1.5 முறை சார்ஜ் செய்ய முடியும்.
பவர் அவுட்புட்டை பொறுத்தவரை, 3 டிவைஸ்கள் இந்த பவர் பேங்க் உடன் இணைக்கப்படும்போது ஒவ்வொரு போர்ட்டிற்கும் எவ்வளவு பவர் அவுட்புட் கிடைக்கும் என்பதை ஐஎன்ஐயு நிறுவனம் தெளிவாக வெளிப்படுத்தவில்லை. பிடி (PD), க்யூசி (QC) மற்றும் சாம்சங் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் 2.0 (Samsung Super Fast Charging 2.0 PPS) போன்ற சார்ஜிங் நெறிமுறைகளுக்கான ஆதரவு உள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, இது விமான பயணங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆக்சஸெரீ ஆகும். சார்ஜ் செய்வதற்கும், ரீசார்ஜ் செய்வதற்கும் உதவும் பிரிக்கக்கூடிய லேன்யார்டு-இன்டெக்ரேடட் யூஎஸ்பி-சி டூ யூஎஸ்பி-சி கேபிளுடன் (Detachable lanyard-integrated USB-C to USB-C cable) வருகிறது.
மேலும் அன்க்ரீன் 48,000எம்ஏஎச் பவர் பேங்கை போலவே, இது நிகழ்நேர பவர் ஸ்டேட்டஸ்-ஐ வழங்கும் ஸ்மார்ட் டிஜிட்டல் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. கடைசியாக பாக்கெட் ராக்கெட் பி50 பவர் பேங்க் ஆனது 18 அடுக்கு மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இணைத்துள்ளது, இது அதிக வெப்பம், ஷார்ட் சர்க்யூட்கள், அதிக சார்ஜிங் மற்றும் பிற பொதுவான ஆபத்துகளுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
என்ன விலை? பாக்கெட் ராக்கெட் பி50 பவர் பேங்க்கின் விலையை பற்றி ஆரம்பிக்கும் முன்பே ஒரு முன்குறிப்பு.. இப்போதைக்கு இந்த மினி பவர் பேங்க் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பவர் பேங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால்.. இங்கே அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம். அதுகுறித்த தகவல் கிடைத்தால், உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
பாக்கெட் ராக்கெட் பி50 போர்ட்டபிள் பவர் பேங்க் ஆனது அமெரிக்காவில் $32.99 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளாக், லைட் ப்ளூ, லைட் க்ரீன், லைட் ஒயிட், லைட் பர்பிள் மற்றும் லைட் பிங்க் என மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








