Home
Gadgets

இவ்ளோ கம்மி விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியா? அடேங்கப்பா.. Infinix வேற லெவல்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் 180W தண்டர் சார்ஜ் டெக்னாலஜியை அறிமுகம் செய்தது. ஆனால் விரைவில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஃபிளாக்‌ஷிப் போன்களில் இந்த அதிநவீன சார்ஜிங் அம்சம் இடம்பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கம்மி விலையில் லேப்டாப்

கம்மி விலையில் லேப்டாப்

மேலும் கடந்த மாதம் கம்மி விலையில் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப் மாடலையும் அறிமுகம் செய்தது இந்நிறுவனம். இந்நிலையில் கம்மி
விலையில் ஸ்மார்ட் டிவி மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

இன்பினிக்ஸ் Y1 32-இன்ச் ஸ்மார்ட் டிவி

இன்பினிக்ஸ் Y1 32-இன்ச் ஸ்மார்ட் டிவி

அதாவது இந்தியாவில் Infinix Y1 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். அதுவும் இன்பினிக்ஸ்
Y1 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.11,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான ஆப்ஸ்

அசத்தலான ஆப்ஸ்

புதிய இன்பினிக்ஸ் Y1 32-இன்ச் ஸ்மார்ட் டிவியில் யூடியூப், பிரைம் வீடியோ, சோனிLIC, ஈரோஸ்நவ், ஜீ5, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பல ஆப் வசதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைனில் திரைப்படங்களை பார்க்கும் பயனர்களுக்கு இந்த ஸ்மார்ட் டிவி கண்டிப்பாக பிடிக்கும்.

 ஆடியோ வசதி

ஆடியோ வசதி

அதேபோல் இன்பினிக்ஸ் Y1 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 20W டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் வெளிவரும். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

ஏற்கனவே கூறியபடி, விரைவில் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட் வழியே அறிமுகமாகும். அதேபோல் கம்மி விலையில் இந்த ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி

புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவியுடன் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இன்பினிக்ஸ் நோட் 5ஜி ஸ்மார்ட்போனை தான் இந்த டிவியுடன் அறிமுகம் செய்ய உள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

இன்பினிக்ஸ் நோட் 5ஜி

இன்பினிக்ஸ் நோட் 5ஜி

வெளிவந்த தகவலின்படி, இன்பினிக்ஸ் நோட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சியோமி, விவோ நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் பெரும்பாலான போன்களில் இதே டிஸ்பிளே வசதி தான் உள்ளது. இந்த டிஸ்பிளேவை பயன்படுத்த அருமையாக இருக்கும்.

ட்ரிபிள் ரியர் கேமரா

மேலும் எல்இடி பிளாஸ் ஆதரவைக் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டு இந்த இன்பினிக்ஸ் நோட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Y1 32-inch Smart TV May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X