ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.13,999 பட்ஜெட்ல 11 இன்ச் டிஸ்பிளே.. 7000mAh பேட்டரி.. 4 ஸ்பீக்கர்கள்.. LTE டேப்லெட்!
டேப்லெட் பிரியர்களுக்கு கம்மியான பட்ஜெட்டில் 4ஜி மாடல் வேண்டுமானால், இப்போது அமேசான் விற்பனையில் (Amazon Sale) டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கும் இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எல்டிஇ (Infinix XPad LTE) மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். 4ஜி கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், 7000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 11 இன்ச் டிஸ்பிளே, 4 ஸ்பீக்கர்கள், 1 டிபி மெமரி என்று மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்புகிறது. இந்த இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எல்டிஇ மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எல்டிஇ அமேசான் விற்பனை (Infinix XPad LTE Amazon Sale): இந்த டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும் இருக்கிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால் ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, 4 ஜிபி ரேம் மாடலை ரூ.10,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் மாடலை ரூ.13,999 பட்ஜெட்டிலும் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இதே ஆக்சிஸ் கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தாலும், உங்களுக்கு ரூ.1,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த இன்பினிக்ஸ் டேப்லெட்டில் டைட்டன் கோல்டு (Titan Gold) மற்றும் ஸ்லெட்டல் கிரே (Steller Grey) கலர்கள் உள்ளன.
அதேபோல ஃப்ரோஸ்ட் ப்ளூ (Frost Blue) கலரும் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் மெட்டல் யூனிபாடி (Metal Unibody) கொடுக்கிறது. மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot), டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் 4 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. ஆகவே, டிசைனில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இப்போது மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எல்டிஇ அம்சங்கள் (Infinix XPad LTE Specifications): இந்த டேப்லெட்டில் 11 இன்ச் (1200 x 1920 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 440 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் பேக் செய்துள்ளது. ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ற டிஸ்பிளே அவுட்புட் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் (XOS) கிடைக்கிறது. 4ஜி கனெக்டிவிட்டி கிடைப்பதால், மீடியாடெட் ஹீலியோ ஜி99 6என்எம் (MediaTek Helio G99 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எல்டிஇ மாடலில் சாட்ஜிபிடி (ChatGPT) பேஸ்டு ஃபோலக்ஸ் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Folax Voice Assistant) கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளே மற்றும் ஸ்பீக்கர் அவுட்புட்டுக்கு ஏற்ப 7000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த மீடியம் பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 4 ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல், அதில் டிடிஎஸ் ஆடியோ (DTS Audio) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கிடைக்கிறது.
3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கொடுக்கிறது. இந்த இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எல்டிஇ மாடலின் கேமராவை பார்க்கையில், 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. சிங்கிள் சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். 496 கிராம் எடை வருகிறது. 7.58 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications