ஸ்கூல் பசங்களுக்கு ஏற்ற சரியான டேப்லெட்.. 11-இன்ச் SPLIT ஸ்க்ரீன் டிஸ்பிளே, 7000mAh பேட்டரி, 4GB ரேம்!
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் டேப்லெட் ஆக இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் 30இ மாடல் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. டிரான்ஷன் ஹோல்டிங்ஸ்-ன் துணை நிறுவனம் ஆன இன்பினிக்ஸ்-ன் இந்த புதிய டேப்லெட் 11 இன்ச் டிஸ்ப்ளேவுடன் மூன்று வெவ்வேறு கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் 30இ டேப்லெட் முக்கிய அம்சங்கள்: மாணவர்களை மையமாக கொண்ட இந்த டேப்லெட், மீடியா டெக் ஹீலியோ ஜி 80 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஏஐ அடிப்படையிலான லேர்னிங் அம்சங்கள் ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் 120,000 க்கும் மேற்பட்ட பிரீமியம் லேர்னிங் சோர்ஸ்களை அணுக வழிவகுக்கும் இந்த டேப்லெட் 18W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் 30இ டேப்லெட் விரிவான அம்சங்கள்: இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட XOS 15 மூலம் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 11-இன்ச் FHD+ (1200 x 1920 பிக்சல்ஸ்) LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே 83.7 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ மற்றும் 440 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது
மேலும் குறைந்த நீல ஒளி உமிழ்வுகளுக்கான TUV ரைன்லேண்ட் சான்றிதழையும் இந்த டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டில் உள்ளமைக்கப்பட்ட 4ஜி இணைப்பு ஆதரவு மற்றும் சிம் கார்டு ஆதரவும் உள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது 4GB RAM மற்றும் 128GB eMMC 5.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட MediaTek Helio G80 சிப்செட்டை கொண்டுள்ளது. ஸ்டோரேஜை MicroSD கார்டு வழியாக விரிவாக்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் 30இ டேப்லெட் ஆனது 5-மெகாபிக்சல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. மேலும் இது செல்பீகள் மற்றும் வீடியோ சாட்களுக்காக 8-மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. இந்த டேப்லெட் 'மாணவர்களின் பாடப்புத்தகங்களுடன் இணைக்கப்பட்ட 120K+ பிரீமியம் கோர்ஸ்களை' வழங்குவதாகக் கூறியது.
மேலும் இந்த டேப்லெட் ஏஐ டியூட்டர் அம்சத்தையும் கொண்டுள்ளது, இது மாணவர்களுக்கு அவர்களின் வீட்டுப்பாடத்தில் உதவு செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த ஏஐ அம்சம் ஆனது போட்டோ சால்விங், டாப் டூ ஆஸ்க், ஏஐ கிரியேஷன் மற்றும் ஏஐ ஸ்க்ரீன் ரிக்கனைசேஷன் போன்ற பல்வேறு டூல்களை வழங்குகிறது.
சுவாரசியமான டேப்லெட் ஸ்பிளிட்-ஸ்கிரீனை ஆதரிக்கிறது, இது பெரிய டிஸ்ப்ளே முழுவதும் பல ஆப் களை அருகருகே இயக்க அனுமதிக்கிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் 30இ டேப்லெட் ஆனது 4G LTE, Wi-Fi 5, ப்ளூடூத், 3.5மிமீ ஜாக் மற்றும் OTG ஆகியவைகளை கொண்டுள்ளது. கடைசியாக இந்த டேப்லெட்டில் 18W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,000mAh பேட்டரி உள்ளது.
இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் 30இ டேப்லெட் விலை மற்றும் விற்பனை: இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் 30இ டேப்லெட் ஆனது சிங்கிள் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இதன் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.13,000 ஆகும். இது இந்தோனேசியாவில் உள்ள இ-காமர்ஸ் தளமான ஷாப்பி வழியாக ட்ரீமி பர்பிள், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் டீப் ப்ளூ ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications