சும்மா கிழி.. வெறும் ரூ.1699 போதும்.. லோவ் லேட்டன்சி.. குயிக் சார்ஜிங்.. டச் கன்ட்ரோல்.. ANC வேற.. எந்த மாடல்?
இசை பிரியர்களை அறக்க பறக்கும் செய்யும் பட்ஜெட்டில் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன், கேமிங் பிரியர்களுக்கான லோவ் லேட்டன்சி மோட், மல்டிஃபங்ஷ்னல் டச் கன்ட்ரோல் மற்றும் IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் அல்ட்ரா பிரீமியம் டிசைனில் இன்பினிக்ஸ் எக்ஸ்இ27 (Infinix XE27) மற்றும் இன்பினிக்ஸ் பட்ஸ் நியோ (Infinix Buds Neo) மாடல்கள் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கின்றன. இந்த பட்ஜெட் இயர்பட்ஸ் மாடல்களின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்ப்போம்.
இன்பினிக்ஸ் எக்ஸ்இ27 அம்சங்கள் (Infinix XE27 Specifications): இந்த மாடல் ஸ்லீக் டிசைனில் (Sleek Design) மெட்டாலிக் லுக் கொடுக்கிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (25dB) கொண்ட 10 எம்எம் டிரைவர்கள் வருகின்றன. இதுவொரு டீப் பேஸ் (Deep Bass) மாடலாகும். ஆகவே, பிரீமியம் குவாலிட்டியில் கிரிஸ்டர் கிளியர் ஆடியோ அவுட்புட் கிடைக்கும்.

இதுபோக வாய்ஸ் கால்களுக்காக குவாட் மைக் (Quad-Mic) வருகிறது. இந்த மைக்கில் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) வருகிறது. ஆகவே, அவுட்டோரில் ஆடியோ மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களையும் கிரிஸ்டல் கிளியராக பெற்று கொள்ளலாம். கேமிங் பிரியர்கள் விரும்பும் லோவ் லேட்டன்சி மோட் (Low Latency Mode) வருகிறது.
இந்த லோவ் லேட்டன்சியை 60ms கேமிங் மோட் (Gaming Mode) மூலம் பயன்படுத்தலாம். வால்யூம், கேமிங் மோட் போன்ற மல்டிபங்ஷனலுக்காக (Multifunctional) டச் கன்ட்ரோல் (Touch Controls) சப்போர்ட் வருகிறது. மொபைல், லேப்டாப், டேப்லெட் போன்றவற்றில் நொடியில் கனெக்ட் செய்துகொள்ள கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) சப்போர்ட் வருகிறது.
இந்த இன்பினிக்ஸ் எக்ஸ்இ27 மாடலில் பக்கா பேட்டரி சிஸ்டம் வருகிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 28 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இந்த பேட்டரிக்கு குயிக் சார்ஜிங் (Quick Charging) சப்போர்ட் வருகிறது. இந்த சார்ஜிங் மூலம் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம்.
வால்யூம், கேமிங் மோட் போன்ற மல்டிபங்ஷனலுக்காக (Multifunctional) டச் கன்ட்ரோல் (Touch Controls) சப்போர்ட் வருகிறது. மொபைல், லேப்டாப், டேப்லெட் போன்றவற்றில் நொடியில் கனெக்ட் செய்துகொள்ள கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) சப்போர்ட் வருகிறது. இந்த இன்பினிக்ஸ் எக்ஸ்இ27 மாடலில் IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water Resistance) வருகிறது.
ஒயிட் (White) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், 3-சைஸ் இயர்டிப்ஸ் (3-size Eartips) கிடைக்கிறது. ஆகவே, காதுகளில் கம்போர்ட் கிடைக்க அவற்றை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். ப்ளூடூத் வி5.0 (Bluetooth V5.0) கனெக்டிவிட்டி மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) வருகிறது. இதன் விலைக்கு முன்பாக மற்றொரு மாடலின் பீச்சர்களை பார்ப்போம்.
இன்பினிக்ஸ் பட்ஸ் நியோ அம்சங்கள் (Infinix Buds Neo Specifications): இந்த மாடலில் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வருகிறது. 13 எம்எம் ஹை-சவுண்ட் டிரைவர்கள் வருகின்றன. இந்த மாடலிலும் குவாட் மைக் வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக 88ms லோவ் லேட்டன்சி மோட் வருகிறது. மல்டிபங்ஷனல் டச் கன்ட்ரோல் வருகிறது. வீலைஃப் ஆப் (WeLife app) சப்போர்ட் உள்ளது.
IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வருகிறது. இந்த மாடலில் ஒயிட் பேர்ல் (White Pearl) மற்றும் பிளாக் ஃபிளேம் (Black Flame) கலர்கள் ஆர்டருக்கு கிடைக்க இருக்கின்றன. இதன் விலை ரூ.1,399ஆகவும், எக்ஸ்இ27 மாடலின் விலை ரூ.1,699ஆகவும் இருக்கிறது. வரும் ஆக்ஸ்ட் 26ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








