பிளிப்கார்ட் பிச்சிக்குது.. 8GB ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. கம்மி விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி..
தற்போது 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே தான் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் வலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. இந்நிலையில் இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது 43-இன்ச் கொண்ட இன்பினிக்ஸ் X3IN ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.16,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும்.

இப்போது இந்த 43-இன்ச் இன்பினிக்ஸ் X3IN ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். குவாட்-கோர் மீடியாடெக் பிராசஸர் வசதியைக் கொண்டு இந்த இன்பினிக்ஸ் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளன இன்பினிக்ஸ் X3IN சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள்.
43-இன்ச் இன்பினிக்ஸ் X3IN ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடல் EPIC இன்ஜின் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதாவது காட்சிகளைத் துல்லியமாகப் பார்க்க EPIC இன்ஜின் உதவும். குறிப்பாக இந்த இன்பினிக்ஸ் X3IN ஸ்மார்ட் டிவி வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இந்த அசத்தலான இன்பினிக்ஸ் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்ஸ், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் ஆதரவு, எச்எல்ஜி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக 16 + மில்லியன் கலர்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
மேலும் குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே ஸ்டோர் என அனைத்தையும் இன்பினிக்ஸ் X3IN ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடலில் பயன்படுத்த முடியும். குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி. எனவே ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக ஸ்மாரட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் பாதுகாப்பான பார்வை அனுபவத்தை உறுதியளிக்கும் ஆன்டி-ப்ளூ ரே டெக்னாலஜி அம்சத்தையும் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் X3IN ஸ்மார்ட் டிவி.
டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இன்பினிக்ஸ் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். புளூடூத், வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த 43-இன்ச் இன்பினிக்ஸ் X3IN ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடலில் உள்ளது.
குறிப்பாக இன்பினிக்ஸ் X3IN ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடல் தனித்துவமான அம்சங்களுடன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








