இதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணுங்க! மலிவு விலையில் 32-இன்ச், 43-இன்ச் டிவிகளை அறிமுகம் செய்த Infinix!
சோனி, சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது இன்பினிக்ஸ் நிறுவனம். குறிப்பாக இன்பினிக்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது.
இந்நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இன்பினிக்ஸ் 32X3IN மற்றும் 43X3IN ஸ்மார்ட் டிவிகள் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இன்பினிக்ஸ் X3IN சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் அட்டகாசமான அம்சங்களைக் கொண்டுள்ளன. இப்போது இந்த டிவிகளின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் தற்போது அறிமுகம் செய்துள்ள 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எச்டி டிஸ்பிளே மற்றும் 1366×768 பிக்சல்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்ஸ், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் ஆதரவு, எச்எல்ஜி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
குறிப்பாக புதிய 32-இன்ச் மற்றும் 43-இன்ச் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவிகள் EPIC இன்ஜின் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். அதாவது காட்சிகளை துல்லியமாகப் பார்க்க EPIC இன்ஜின் உதவும். குறிப்பாக இந்த இன்பினிக்ஸ் X3IN சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
குவாட்-கோர் மீடியாடெக் பிராசஸர் வசதியைக் கொண்டு இந்த இன்பினிக்ஸ் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளன இன்பினிக்ஸ் X3IN சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள்.

மேலும் குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே ஸ்டோர் என அனைத்தையும் இன்பினிக்ஸ் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்த முடியும். குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.
நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்த முடியும். மேலும் இந்த செயலிகளுக்குத் தகுந்த ரிமோட் உடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. மேலும் பாதுகாப்பான பார்வை அனுபவத்தை உறுதியளிக்கும் ஆன்டி-ப்ளூ ரே டெக்னாலஜி அம்சத்தையும் கொண்டுள்ளன புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவிகள்.
டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன இன்பினிக்ஸ் எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள். எனவே இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

32-இன்ச் கொண்ட இன்பினிக்ஸ் 32X3IN ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.9,799-ஆக உள்ளது. பின்பு 43-இன்ச் கொண்ட 43X3IN ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. வரும் மே 18-ம் தேதி இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








