விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி மாடல்கள்
இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் புதிய இன்பினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் எக்ஸ்3 டிவி ஆனது 32-இன்ச் , 43-இன்ச் அளவுகளில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த
இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்பினிக்ஸ் எக்ஸ்3 32-இன்ச் மாடல் ஆனது எச்டி-ரெடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 1366 x 768பிக்சல்தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையா கொண்டு இந்த 32-இன்ச் மாடல் வெளிவரும்.

அதேபோல் இன்பினிக்ஸ் எக்ஸ்3 43-இன்ச் டிவி மாடல் ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதி மற்றும் 1920 x 1080 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவரும். குறிப்பாக YouTube, Disney+ Hotstar, Prime Video மற்றும் Netflix உள்ளிட்ட பிரபலமான OTT பயன்பாடுகளுக்கான ஆதரவுடன் வெளிவரும் இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

மேலும் இந்த இரண்டு டிவி மாடல்களும் மெலிதான பெசல்கள் மற்றும் பிரீமியம் டிசைனுடன் வரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

HDR10, Dolby Audio மற்றும் ஒரு-டச் கூகுள் அசிஸ்டன்ட் ஆதரவு போன்ற அம்சங்களுடன் இன்பினிக்ஸ் எக்ஸ்3 டிவி மாடல்கள் வெளிவரும். இதுதவிர EPIC 2.0 பட எஞ்சினுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி
மாடல்கள். அதேபோல் சமீபத்தில் இந்நிறுவனம் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இப்போதுஇந்த சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி
இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாகும். இந்தஸ்மார்ட்போனானது 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த சாதனம் 2460 x 1080 பிக்சல்கள் தெளிவுத்திறனுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும், 500 நிட்ஸ் உச்ச பிரகாச அளவை கொண்டிருக்கிறது. இது சிறந்த காட்சி, ஓடிடி ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் உள்ளிட்ட அனுபவத்தை மேம்பட்ட விதத்தில் வழங்குகிறது. இந்த டிஸ்ப்ளேயின் தரமான அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஆனது 6என்எம் ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்ட ஆக்டோ கோர் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. அதோடு இது இன்ஃபினிக்ஸ் மம்ஃப்யூஷன் எனப்படும் மெய்நிகர் ரேம் சேமிப்பக விரிவாக்க அமைப்பைக் கொண்டிருக்கிறது. இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஆனது யூனி-கர்வ் வடிவமைப்புடன் வருகிறது. மேலும் பின்பக்க கேமரா அம்சத்தை பொறுத்த வரையில் இந்த சாதனம் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் தொடர் சாதனங்களை போன்றே இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த 5ஜி ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 48 எம்பி பிரதான கேமரா உட்பட மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. பின்புற கேமரா அமைப்பை பொறுத்தவரையில் 13 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் குவாட் எல்இடி ஃபிளாஷ் உடனான 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் வருகிறது. சாதனத்தின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 960 எஃப்பிஎஸ் ஸ்லோ மோஷன் மற்றும் நைட் செல்ஃபி போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஆனது ஆண்ட்ராய்ட் 11 அடிப்படையிலான எக்ஸஓஎஸ் 10 ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.


Click it and Unblock the Notifications