Home
Gadgets

Infinix X1 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 32' இன்ச் மற்றும் 43' இன்ச் மாடலாக அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்று தனது எக்ஸ் 1 தொடர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களுடன், இதை எப்பொழுது? எங்கே வாங்கலாம் என்ற முழு விபரத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க...

இன்பினிக்ஸ் எக்ஸ் 1 சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி

இன்பினிக்ஸ் எக்ஸ் 1 சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி

இன்பினிக்ஸ் அறிமுகம் செய்துள்ள இன்பினிக்ஸ் எக்ஸ் 1 சீரிஸ் டி.வி குறுகிய பெசல் உடன் டிஸ்பிளே-டு-பாடி விகிதத்துடன் அதிவேக விஷன் அனுபவத்துடன் வருகிறது. இன்பினிக்ஸ் எக்ஸ் 1 சீரிஸ் ஆண்ட்ரோயிட் ஸ்மார்ட் டிவிக்கள் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரோம் கொண்ட மீடியாடெக் குவாட் கோர் செயலியில் இயங்குகின்றது. இந்த ஸ்மார்ட் டிவி வெறும் ரூ. 11,999 என்ற விலையில் 32' இன்ச் மாடலாக பிளிப்கார்ட் வழியே வரும் 18ம் தேதி முதல் கிடைக்கிறது.

ப்ளூ லைட் குறைப்பு தொழில்நுட்பம்

ப்ளூ லைட் குறைப்பு தொழில்நுட்பம்

இன்ஃபினிக்ஸ் டிவி ப்ளூ லைட் குறைப்பு தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது டிவியில் இருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கும் ப்ளூ-ரே (Blue Ray) கதிர்களைக் குறைக்கிறது. இன்ஃபினிக்ஸ் டிவியில் கண் பராமரிப்பு தொழில்நுட்பமும் இருப்பதால் எல்.ஈ.டி பேனல் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் மட்டத்தில் பாதுகாப்பான பார்வை அனுபவத்தை வழங்குகிறது.

TUV ரைன்லேண்டால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்மார்ட் டிவி

TUV ரைன்லேண்டால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்மார்ட் டிவி

இன்பினிக்ஸ் கண் பராமரிப்பு தொழில்நுட்பம் தீர்வு TUV ரைன்லேண்டால் பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. இன்ஃபினிக்ஸ் எக்ஸ் 1 ஆண்ட்ராய்டு டிவியின் 32' இன்ச் மாடலில் 20W ஸ்பீக்கர்கள் உள்ளன, இதன் 43 இன்ச் மாடலில் 24W ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப் போன்ற பயன்பாடுகளுக்கான இணைப்பிற்காக உள்ளமைக்கப்பட்ட Chromecast வழங்கப்பட்டுள்ளது.

ஹேண்ட்ஸ் ஃப்ரீ அனுபவம்

ஹேண்ட்ஸ் ஃப்ரீ அனுபவம்

இத்துடன் தனிப்பட்ட மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ அனுபவத்தைப் பெற Google அசிஸ்டன்ட் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு முன்னணியில், 32 இன்ச் மற்றும் 43 இன்ச் எக்ஸ் 1 ஆண்ட்ராய்டு டிவிகளில் வைஃபை, புளூடூத் 5.0, லேன் போர்ட், ஆப்டிகல் அவுட் மற்றும் ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளது. 32 இன்ச் மாடலில் ஒரு யூ.எஸ்.பி 2.0 மற்றும் ஒரு ஜோடி எச்.டி.எம்.ஐ போர்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

இன்பினிக்ஸ் எக்ஸ் 1 ஸ்மார்ட் டிவியில் 43' இன்ச் மாடலில் இரண்டு யூ.எஸ்.பி 2.0 போர்ட் மற்றும் மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 32' இன்ச் மாடலில் ஐஆர் ரிமோட் மற்றும் 43' இன்ச் மாடலில் புளூடூத் ரிமோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவிகள் முறையே ரூ .11,999 மற்றும் ரூ .19,999 விலையில் 32' இன்ச் மற்றும் 42' இன்ச் மாடல்கள் வாங்க கிடைக்கிறது. இந்த சாதனங்கள் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Infinix X1 Smart Android TV Launched In India Price and Other Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X