கம்மி விலையில் 32-இன்ச், 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வேணுமா? சிறப்பு சலுகை.! சில நாட்கள் மட்டுமே.!

|

பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 32-இன்ச், 40-இன்ச் மற்றும் 43-இன்ச் டிஸ்பிளே அளவுகளில் உள்ள இன்பினிக்ஸ் எக்ஸ் 1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விலைகுறைக்கப்பட்டுள்ளது.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில்

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் எக்ஸ் 1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள் சலுகை விலையில் கிடைக்கிறது. அதேபோல் வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரை மட்டுமே இந்த சிறப்பு சலுகை இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளும் கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இந்த மூன்று ஸ்மார்ட்டிவிகளுமே மீடியாடெக் குவாட்-கோர் ப்ராசஸர் வசதி மற்றும் 1ஜிபி ரேம் ஆதரவுடன் வெளிவந்தன.

சிறப்பு சலுகை

சிறப்பு சலுகை

 • 32-இன்ச் கொண்ட இன்பினிக்ஸ் எக்ஸ்1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.17,999-ஆகும். ஆனால் தற்போது ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 • 42-இன்ச் கொண்ட இன்பினிக்ஸ் எக்ஸ்1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.24,999-ஆகும். ஆனால் தற்போது ரூ.22,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 • 40-இன்ச் கொண்ட இன்பினிக்ஸ் எக்ஸ்1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.26,990-ஆகும். ஆனால் தற்போது ரூ.22,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 • 40-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்1 டிவியின் அம்சங்கள்

  40-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்1 டிவியின் அம்சங்கள்

  இன்பினிக்ஸ் நிறுவனத்தின் 40-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்1 டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு எச்டிஆர் 10 ஆதரவு, எச்எல்ஜி ஆதரவு மற்றும் 350 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

  கொஞ்சம் வெயிட் பண்ணுங்க: ஒன்னு இல்ல மூன்று மாடல் இருக்கு- விரைவில் வரும் ஜியோபுக் லேப்டாப்!கொஞ்சம் வெயிட் பண்ணுங்க: ஒன்னு இல்ல மூன்று மாடல் இருக்கு- விரைவில் வரும் ஜியோபுக் லேப்டாப்!

   எக்ஸ்1 டிவி மாடல்

  40-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்1 டிவி மாடல் பெஸல்லெஸ் வடிவமைப்பு மற்றும் ஐகேர் தொழில்நுட்பத்துடன் எபிக் 2.0 பிக்சர் எஞ்சினையும் கொண்டுள்ளது. எனவே சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். பின்பு இந்த சாதனத்தின் ப்ராசஸர் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

  கடலுக்கு நடுவில் இப்படி ஒரு காற்று விசையாழியா? 5 மடங்கு சக்தியை பெருக்க புது மல்டி டர்பைன் தொழில்நுட்பம்..கடலுக்கு நடுவில் இப்படி ஒரு காற்று விசையாழியா? 5 மடங்கு சக்தியை பெருக்க புது மல்டி டர்பைன் தொழில்நுட்பம்..

  மாலி-470 ஜிபியு, 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி

  அதன்படி மாலி-470 ஜிபியு, 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் எம்டிகே 6683 64-பிட் ப்ராசஸர் மூலம் இயங்குகிறது 40-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்1 டிவி மாடல். பின்பு 24 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

  இலக்கு 1500 கிமீ தூரத்துக்கு அந்த பக்கம்: சரியா குறிவைத்து தட்டி தூக்கிய வடகொரிய ஏவுகணை- சோதனை வெற்றி!இலக்கு 1500 கிமீ தூரத்துக்கு அந்த பக்கம்: சரியா குறிவைத்து தட்டி தூக்கிய வடகொரிய ஏவுகணை- சோதனை வெற்றி!

  இன்பினிக்ஸ் எக்ஸ்1 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்கள்

  இன்பினிக்ஸ் எக்ஸ்1 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்கள்

  32-இன்ச் கொண்ட இன்பினிக்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட் டிவி ஆனது எச்டி எல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், பெஸல்லெஸ் வடிவமைப்பு எபிக் 2.0 பிக்சர் எஞ்சின் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவி.

  43-இன்ச் கொண்ட இன்பினிக்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட் டிவி மாடல் ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவந்துள்ளது.மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், பெஸல்லெஸ் வடிவமைப்பு எபிக் 2.0 பிக்சர் எஞ்சின் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி.

  ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?

  3-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 400

  இந்த 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் TUV ரெய்ன்லேண்ட் சான்றிதழுடன் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 32-இன்ச் கொண்ட இன்பினிக்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட் டிவி ஆனது 20 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு 43-இன்ச் கொண்ட இன்பினிக்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட் டிவி மாடல் 24 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.


  மேலும் இந்த 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி உடன் மீடியாடெக் குவாட்-கோர் ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Infinix X1 Android Smart TV Models Get Price Cut in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X