Home
Gadgets

விட்ராதீங்க! ரூ.10000 பட்ஜெட்டில் QLED டிவி! அடிச்சி புடிச்சி காத்திருக்கும் மக்கள்! இன்பினிக்ஸ் கம்பெனி வேற!

இந்தியாவில் முதல்முறையாக பட்ஜெட் விலையில் 32 இன்ச் HD டிவி மற்றும் 43 இன்ச் 4K டிவி, இரண்டையும் கியூஎல்இடி (QLED) டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்துள்ளது, இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம். இவ்வளவு மலிவான விலையில் கியூஎல்இடி டிவிகள் விற்பனைக்கு வருவது வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் பிரம்மாண்ட அம்சங்களுடன் போன்கள் மற்றும் டிவிகளை களமிறக்கி தனிக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கி வருகிறது. இதுவரையில், எந்த நிறுவனமும் பட்ஜெட் விலையில் கொடுக்காத அம்சங்கள் இன்பினிக்ஸ் தயாரிப்புகளில் கிடைப்பதால், மக்களும் விரும்பி வாங்கியும் பயன்படுத்தியும் வருகின்றனர்.

ரூ.10000 பட்ஜெட்டில் QLED டிவி! அடிச்சி புடிச்சி காத்திருக்கும் மக்கள்

அந்த வரிசையில், வெறும் ரூ.10000 பட்ஜெட்டில் 32 இன்ச் HD டிவியையும், ரூ.20000 பட்ஜெட்டில் 43 இன்ச் 4K டிவியையும் அறிமுகம் செய்து ஒட்டுமொத்த டிவி பிரியர்களையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது, இன்பினிக்ஸ் நிறுவனம். இந்த டிவிகளில் மற்ற அம்சங்களும் பின்னி எடுக்கின்றன. இதன் முழு விவரங்கள் பின்வருமாறு.

இன்பினிக்ஸ் W1 கியூஎல்இடி டிவி சீரிஸ் அம்சங்கள் (Infinix W1 QLED TV Series Specifications): இன்பினிக்ஸ் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிவியானது, எச்டி (HD) சப்போர்ட் கொண்டுள்ளது. அதோடு 90% என்டிஎஸ்சி வைடு கலர் காமட் (NTSC Wide Colour Gamut) மற்றும் கேம் டாஸ்போர்ட் ஆப்டிமைசேஷன் (Game Dashboard Optimization) வருகிறது.

இன்பினிக்ஸ் 42 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிவியானது, 4K சப்போர்ட் கொண்டுள்ளது. அதோடு 94% என்டிஎஸ்சி வைடு கலர் காமட் மற்றும் கேம் டாஸ்போர்ட் ஆப்டிமைசேஷன் வருகிறது. குறிப்பாக, எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் உள்ளது.

இரண்டிலும் டிஸ்பிளேவை தவிர மற்ற அம்சங்கள் ஒரே மாதிரியாகவே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இரண்டு டிவிகளும் வெப்ஓஎஸ் (webOS) உடன் குவாட் கோர் (Quad-Core) சிப்செட் மற்றும் ஐஎம்சி பிஎக்ஸ்4 ஜிபியு ( IMG BXE4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளன. 1 ஜிபி ரேம் + 8 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது.

நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) உள்ளிட்ட ஓடிடி (OTT) ஆப்கள் வருகின்றன. அதோடு யூடியூப் (YouTube), ஆப்பிள் ஏர் பிளே (Apple AirPlay) மற்றும் ஆப்பிள் ஹோம் (Apple Home) சப்போர்ட் உள்ளது.

4K மாடலில் மேஜிக் ரிமோட் கன்ட்ரோல் வசதி இருக்கிறது. அதாவது வாய்ஸ் மூலம் டிவியை கன்ட்ரோல் செய்யலாம். அதோடு டூயல் பேண்ட் வைபை, 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், 1 ஆர்எஃப் இன்புட் (RF Input), 1 ஏவி இன்புட் (AV Input) மற்றும் 1 ஹெட்போன் ஜேக் வருகிறது. டால்பி ஆடியோ உடன் 20W ஸ்பீக்கர்கள் வருகின்றன.

இந்த டிவிகளில் விலையை பொறுத்தவரையில், இன்பினிக்ஸ் 32 இன்ச் எச்டி மாடல் ரூ.10,999க்கும், இன்பினிக்ஸ் 43 இன்ச் 4K மாடல் ரூ.20,999க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த டிவிகள் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றன. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்துகொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix W1 QLED TVs Launched in India Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X