ஒரு கல்லுல ரெண்டு மாங்கா.. கம்மி விலையில் டிவி, போனை அறிமுகம் செய்யும் Infinix! அறிமுக தேதி இதுதான்.!
இந்தியாவில் மிகவும் பிரபலமான இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இன்பினிக்ஸ் W1 QLED டிவி சீரிஸ் மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு சாதனங்களின் அறிமுக தேதி தற்போது வெளியாகி உள்ளது.
குறிப்பாக இன்பினிக்ஸ் W1 QLED டிவி சீரிஸ் ஆனது வரும் ஜூலை 11 ஆம் தேதி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு அதிகம் எதிர்பார்க்கப்படும் இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஜூலை 14-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனங்களின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் W1 QLED டிவி சீரிஸ் ஆனது 32-இன்ச் மற்றும் 43-இன்ச் அளவுகளில் வெளிவரும். குறிப்பாக 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எச்டி QLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது என்றும், 43-இன்ச் டிவி அல்ட்ரா எச்டி QLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளுக்கும் வெப்ஓஎஸ் (webOs) மூலம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவிகள் சிறப்பான அனுபவத்தை வழங்கும். அதேபோல் இன்பினிக்ஸ் W1 QLED டிவி சீரிஸ் ஆனது ThinQ Al மொபைல் ஆப் உடன் இணைந்து பயன்படுத்த முடியும். எனவே இந்த ThinQ Al மொபைல் ஆப் மூலம் இன்பினிக்ஸ் W1 QLED டிவிகளை எளிமையாக இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பினிக்ஸ் W1 QLED டிவி சீரிஸ் மாடல்கள் ஆப்பிள் சேவைகள் மற்றும் ஏர்ப்ளே அம்சங்களை ஆதரிக்கின்றன. மேலும் ஸ்லிம் பாடி, ஃப்ரேம் இல்லாத வடிவமைப்பு, தெளிவான வண்ணங்கள், வெப்ஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன. மேலும் 32-இன்ச் கொண்ட இன்பினிக்ஸ் W1 QLED டிவி ஆனது ரூ.12,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்பொன் இந்தியாவில் அறிமுகமாகும்.
குறிப்பாக மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் உடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதில் 16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

50எம்பி டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 8எம்பி செல்பி கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போன் ஆனது ரூ.13,000-விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








