நச்சுனு பட்ஜெட்.. 8GB ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. 2 டிவிகளை அறிமுகம் செய்த Infinix.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது சாம்சங், ஒன்பிளஸ், சியோமி நிறுவனங்களை விட சற்று குறைந்த விலையில் தரமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது இன்பினிக்ஸ் W1 கியூஎல்இடி 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை (Infinix W1 QLED TV series) தான் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். இந்த இரண்டு இரண்டு டிவிகளும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

இப்போது புதிய இன்பினிக்ஸ் டிவிகளின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இன்பினிக்ஸ் W1 கியூஎல்இடி 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.
அதேபோல் 3840 x 2160 பிக்சசல்ஸ், 320 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10, MEMC டெக்னாலஜி மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் டிஸ்பிளே 1.07 பில்லியன் வண்ணங்களின் வரம்பை வழங்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த இன்பினிக்ஸ் W1 கியூஎல்இடி 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஆனது பெசல்-லெஸ் டிசைன்-ஐ (Bezel-less design) கொண்டுள்ளன. மேலும் இந்த டிவிகளில் ரியல்டெக் குவாட்கோர் பிராசஸர் வசதி (Realtek Quad Core Processor) உள்ளது. எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ரியல்டெக் குவாட்கோர் பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் வெப்ஒஎஸ் (webOS) மூலம் இயங்குகின்றன இந்த இன்பினிக்ஸ் W1 கியூஎல்இடி 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள். பின்பு நெட்ஃபிக்ஸ் பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம், யூட்யூப் உள்ளிட்ட பல ஆப்ஸ்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும். அதேபோல் கேமிங் வசதிகளுக்கும் இந்த டிவிகள் அருமையாகப் பயன்படும்.
1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியுன் இந்த இரண்டு இன்பினிக்ஸ் ஸ்மர்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. அதேபோல் வாய்ஸ் மற்றும் சைகை கட்டுப்பாட்டுடன் கூடிய மேஜிக் ரிமோட் கொண்டுள்ளன இந்த புதிய இன்பினிக்ஸ் W1 கியூஎல்இடி 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இந்த டிவிகளின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

டூயல்-பேண்ட் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆர்எப் இன்புட்(RF input), ஏவி இன்புட் (AV input), ஹெட்போன் ஜாக், லேன் உளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ள இந்த இரண்டு இன்பினிக்ஸ் டிவிகள். மேலும் இந்த டிவிகள் டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவைக் கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. எனவே இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
இன்பினிக்ஸ் W1 கியூஎல்இடி 55-இன்ச் டிவியின் விலை ரூ.37,990-ஆக உள்ளது. இதன் 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.47,990-ஆக உள்ளது. தற்போது இந்த இரண்டு டிவிகளும் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவிகளை வாங்கும் பயனர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








