Home
Gadgets

அடிச்சு தூக்கிய ஆஃபர்.. ரூ.9,799 பட்ஜெட்ல QLED டிவி.. HDR10 டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. 1ஜிபி ரேம்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் கியூஎல்இடி டிஸ்பிளே, எச்டிஆர்10, டால்பி ஆடியோ போன்ற பீச்சர்களை கொண்ட இன்பினிக்ஸ் டபுள்யூ சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவி (Infinix W Series 32 inch QLED TV) மாடலானது தள்ளுபடியில் கிடைக்கிறது. மலிவான விலைக்கு கிடைக்கும் கியூஎல்இடி டிஸ்பிளே மாடலாக இருப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் டபுள்யூ சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவியின் விவரங்களை பார்க்கலாம்.

இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், ஸ்மார்ட்டிவி மாடல்களையும் இன்பினிக்ஸ் நிறுவனம் களமிறக்கி வருகிறது. இதில் கியூஎல்இடி டெக்னாலஜி கொண்ட மாடல்கள் ரூ.10,000 பட்ஜெட்டிலேயே விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றில் இன்பினிக்ஸ் டபுள்யூ சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவியானது அதைவிட மலிவாக இப்போது கிடைக்கிறது.

அடிச்சு தூக்கிய ஆஃபர்.. ரூ.9,799 பட்ஜெட்ல QLED டிவி.. HDR10 டிஸ்பிளே!

பிளிப்கார்ட் தளத்தில் 42 சதவீத டிஸ்கவுண்ட் போக இது ரூ.9,799 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலையில் இருந்து குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த கம்மியான விலையிலும் ரூ.9,799 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. இந்த டிவியில் வெப்ஓஎஸ் (WebOS) மட்டுமே கிடைக்கும். இருப்பினும், ஓடிடி ஆப்கள் மற்றும் ஸ்மார்ட் பீச்சர்களை பேக் செய்துள்ளது.

இன்பினிக்ஸ் டபுள்யூ சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Infinix W Series 32 inch QLED TV Specifications): ரியல்டெக் குவாட் கோர் (Realtek Quad Core) சிப்செட் மற்றும் வெப்ஓஎஸ் (WebOS) கிடைக்கிறது. வெப்ஓஎஸ் கிடைத்தாலும், 1000+ ஆப்கள் கிடைக்கிறது. இதில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், ஜியோஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன.

இந்த விலையிலும் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாகவே இருக்கிறது. டிஸ்பிளே மற்றும் அதனுடயை பீச்சர்களில் பட்ஜெட்டைவிட கூடுதல் அவுட்புட் கொடுக்கிறது. பெசல்-லெஸ் டிசைன் (Bezel-less Design) மட்டுமல்லாமல், எச்டிஆர்10 (HDR10) மற்றும் 16.7 மில்லியன் கலர் என்ஹான்ஸ் கிடைக்கிறது.

மேலும், டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு இவை எதிர்பார்க்க முடியாத பீச்சர்களாகும். 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த கியூஎல்இடி டெக்னாலஜி டிஸ்பிளேவில் 280 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன் கிடைக்கிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் குவாண்டம் டாட் டெக்னாலஜியை கொடுக்கிறது.

இந்த டிஸ்பிளே பீச்சர்களுக்கு ஏற்ப சவுண்ட் அவுட் கொடுக்கும்படி ஆடியோ பீச்சர்கள் கிடைக்கின்றன. 16W சவுண்ட் அவுட்புட் கொடுக்கும் டவுன் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. 2 ஸ்பீக்கர்கள் இருக்கின்றன. இதற்கு டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டிஜிட்டல் ஆடியோ அவுட் கிடைக்கிறது. சிப்செட் மட்டுமல்லாமல், மாலி ஜி31 (MALI G31) கிராபிக்ஸ் கார்டு கொடுத்து இருக்கிறது.

இந்த இன்பினிக்ஸ் டபுள்யூ சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவியின் கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கையில், ப்ளூடூத் மற்றும் வை-பை போன்ற முக்கிய வயர்லெஸ் பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல 3 எச்டிஎம்ஐ போர்ட்களை (HDMI Ports) கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டில் 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால், இதில் கூடுதலாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல 2 யுஎஸ்பி போர்ட்கள் மற்றும் 1 ஹெட்போன் ஜாக் கிடைக்கிறது. மேலும், ஆடியோ/வீடியோ போன்ற இன்புட் மற்றும் அவுட்புட் போர்ட்கள் கிடைக்கின்றன. பிரீமியம் டிவிகளில் கிடைக்கும் ஹோம் டாஸ்போர்ட், சவுண்ட் மோட்கள், ஆடியோ மோட்கள் போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. ஹாட்-கீஸ்களுடன் ரிமோட் கிடைக்கிறது. 1 வருட வாரண்டி பெற்று கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix W Series 32 inch QLED WebOS TV Available At Discounted Price Check Flipkart Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X