Home
Gadgets

100W சார்ஜர்.. 15.6-இன்ச் FHD டிஸ்பிளே.. AI வெப் கேம்.. இப்படி ஒரு Laptop-க்கு தான் இங்க பல பேர் வெயிட்டிங்!

ஆஹா இப்படி ஒரு லேப்டாப்பிற்கு தானே இவ்ளோ நாள் காத்திருந்தோம் என்று கூறவைக்கும் படியாக, 100W சார்ஜர், 15.6-இன்ச் ஃபுல்எச்டி டிஸ்பிளே, ஃபுல்எச்டி ஏஐ வெப்கேம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களுடன் ஒரு புதிய லேப்டாப் மாடல் வருகிற ஜூன் 27 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. அது இன்பினிக்ஸ் ஸீரோபுக் அல்ட்ரா (Infinix ZeroBook Ultra) லேப்டாப் ஆகும். இன்பினிக்ஸ் நிறுவனம் ஜூன் 21 ஆம் தேதியன்று அதன் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டிற்கு முன்னதாகவே, இன்நிறுவனம் அதன் அடுத்த லேப்டாப் மாடலின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. இன்பினிக்ஸ் ஸீரோபுக் அல்ட்ரா என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? அதற்கும் முன் வரும் இன்பினிக்ஸ் நோட் 40 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படியிருக்கும்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

Infinix ZeroBook Ultra-க்கு தான் இங்க பல பேர் வெயிட்டிங்!

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி ஸீரோபுக் அல்ட்ரா லேப்டாப் ஆனது ஜென் ஏஐ (Gen AI) திறன்கள் மற்றும் இன்டெல் ஏஐ பூஸ்ட் (Intel AI Boost) ஆகியவற்றை கொண்டிருக்கும். இதுதவிர்த்து ஸீரோபுக் அல்ட்ராவின் பல முக்கிய அம்சங்களையும் இன்பினிக்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதன்படி இது 1டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் (1TB SSD storage), 32ஜிபி டிடிஆ5 ரேம் (32GB DDR5 RAM) மற்றும் இன்டெல் மீட்டியர் லேக் (Intel Meteor Lake) அடிப்படையிலான இன்டெல் கோர் அல்ட்ரா ப்ராசஸர் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

இன்டெல் மீட்டியர் லேக் ஆனது இன்டெல் ஏஐ பூஸ்ட் எனப்படும் இன்டெல்-ன் முதல் பில்ட்-இன் என்பியு (Intel's first built-in NPU) மற்றும் ரே ட்ரேஸிங் (Ray Tracing) மற்றும் எக்ஸ்இ எஸ்எஸ் ஃப்ரேம் அக்ஸலரேஷன் (XE SS Frame Acceleration) கொண்ட இன்டெல் ஏஆர்சி ஜிபியு (Intel ARC GPU) ஆகியவற்றை பயன்படுத்துகிறது.

கூடுதலாக, இன்பினிக்ஸ் ஸீரோபுக் அல்ட்ரா லேப்டாப் ஆனது 100 சதவீதம் எஸ்ஆர்ஜிபி கலர் வண்ண கேமட் உடனான 15.6-இன்ச் எஃப்எச்டி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பதையும் இன்பினிக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஜட்ஜில் குவாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டிடிஎஸ் சவுண்ட் ப்ராசஸிங், எஃப்எச்டி ஏஐ வெப்கேம் மற்றும் டூயல் மைக் அரே போன்ற அம்சங்களும் இடம்பெறும்.

கடைசியாக இது 70Whr பேட்டரி மற்றும் 100W சார்ஜரையும் கொண்டிருக்கும். முக்கிய அம்சங்களை வெளிப்படுத்திய இன்பினிக்ஸ் நிறுவனம் லேப்டாப்பின் விலை நிர்ணயத்தை பற்றி எந்த தகவலையும் பகிரவில்லை. தற்போது வரையிலாக இந்த லேப்டாப், பிரபல இ-காமர்ஸ் வளைத்தளமான பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படும் என்பது மட்டுமே உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜூன் 21 அறிமுகமாகும் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் மேக்சார்ஜ் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி, ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் போன்றவைகளை கொண்டிருக்கும்.

பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி வேரியண்ட் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப்செட், 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 14, தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி53 ரேட்டிங், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், அதில் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்களுடன் 108 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix to Launch New 15 6 inch Laptop ZeroBook Ultra with 100W Charger in India on June 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X