Home
Gadgets

ரூ.20,000 க்கும் குறைவான விலைக்கு Wireless Charging போன்.. SIM கார்டு உடன் முதல் டேப்லெட்.. Infinix அசத்தல்!

பட்ஜெட்டுக்கு ஏற்ற.. ஆனால் அதிக செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கு பெயர்போன மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளில் ஒன்றான இன்பினிக்ஸ் நிறுவனம், டேப்லெட் சந்தையில் காலடி எடுத்து வைக்க உள்ளது. கிஸ்மோசீனா வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் (Infinix XPAD) என பெயரிடப்பட்ட அதன் முதல் டேப்லெட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த டேப்லெட் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? எப்போது அறிமுகம் ஆகும்? இதோ விவரங்கள்:

இன்பினிக்ஸ் எக்ஸ்பேட்-ன் தனித்துவமான அம்சம் அதன் சிம் கார்டு ஆதரவாகும். இது வைஃபை கனெக்டிவிட்டி தேவையில்லாமல் மொபைல் டேட்டாவை பயன்படுத்தி இன்டர்நெட் அக்சஸ்-ஐ பெற அனுமதிக்கும். இந்த அம்சம் ஒரு டேப்லெட்டிற்கான பயன்பாட்டையும், தேவையையும் மேம்படுத்தும், குறிப்பாக அடிக்கடி பயணத்தில் இருக்கும் பயனர்களுக்கு இதுவொரு முக்கிய அம்சமாக இருக்கும்!

SIM கார்டு உடன் முதல் டேப்லெட்.. Infinix அசத்தல்!

இதுதவிர்த்து இன்பினிக்ஸ் எக்ஸ்டேப் டேப்லெட்டின் சரியான குறிப்பிட்ட தொழில்நுட்ப விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் கூட இது மலிவு-விலை டேப்லெட் ஆக இருக்கும் என்பதால், செயல்திறனை சமநிலைப்படுத்தும் அளவிலான மிட்-ரேன்ஜ அம்சங்களையே இது பேக் செய்யும். இன்பினிக்ஸ் நிறுவனமானது எடுத்த வேகத்தில் பிரீமியம் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யவும் அதிக வாய்ப்பில்லை. மேலும் இது சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற வெளியீட்டு விவரங்களும் எதுவும் வெளியாகவில்லை.

இன்பினிக்ஸ்-ன் மற்ற அறிமுகங்களை பொறுத்தவை, இந்நிறுவனம் சமீபத்தில் அதன் நோட் 40 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.25,000 க்கு கீழ் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம். அந்த நேரத்தில் நோட் 40 மாடலின் அறிமுகம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையில் இன்பினிக்ஸ் நோட் 40 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூன் 21 அன்று அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரசியமாக இன்பினிக்ஸ் நோட் 40 ஸ்மார்ட்போன் ஆனது அதிக விலையுள்ள நோட் 40 ப்ரோவை போலவே வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை (Wireless Charging Support) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,000 க்கும் குறைவான விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் (Wireless Charging Technology) இவ்வளவு மலிவான விலைக்கு வரும் முதல் ஸ்மார்ட்போனாக இன்பினிக்ஸ் நோட் 40 இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 15W வயர்லெஸ் மேக்சார்ஜ் ஆதரவு (15W Wireless MagCharge Support) இருக்கும்.

உறுதி செய்யப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, இன்பினிக்ஸ் நோட் 40 ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளேவை (120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 93.8 சதவீத ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ) கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் மேக்சார்ஜ் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யும்.

இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி (Infinix Note 40 Pro+ 5G) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி (Infinix Note 40 Pro 5G) ஸ்மார்ட்போனில் காணப்பட்டதை போலவே இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஆனதும் ஜேபிஎல் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட சவுண்ட் சிஸ்டம் உடன் வரும். இந்த சிஸ்டம் அதிவேக ஆடியோ, 360 டிகிரி சமச்சீர் ஒலி மற்றும் ஒரு உயர்த்தப்பட்ட பாஸ் ஆகியவற்றை வழங்குவதாக கூறப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் ஆனது பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட வேரியண்ட்டை போலவே மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப்செட் (MediaTek Dimensity 7020 SoC), 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி UFS2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம்.

இது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 14 மற்றும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி53 மதிப்பீட்டையும் கொண்டிருக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை, இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். அதில் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்களுடன் 108 மெகாபிக்சல் மெயின் சென்சார் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா பொருத்தப்படலாம்.

Best Mobiles in India

English summary
Infinix to Launch Its First Tablet XPAD with SIM Card Support After Note 40 5G India Launch June 21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X