Home
Gadgets

இந்தியாவின் முதல் 32 இன்ச் QLED டிவியை அறிமுகம் செய்யும் பிரபல நிறுவனம்.! என்ன விலை?

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கிறது இந்த இன்பினிக்ஸ் நிறுவனம்.

எனவேதான் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவின் முதல் 32 இன்ச் QLED டிவியை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் 32-இன்ச் QLED என்பதால், அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் முதல் 32 இன்ச் QLED டிவி அறிமுகம் செய்யும் பிரபல நிறுவனம்!

QLED டிஸ்பிளேக்கள் பொதுவாக சாம்சங் வழங்கும் பிரீமியம் தர டிவி மாடல்களில் காணப்படுகின்றன. இந்நிலையில் பட்ஜெட் விலையில் QLED டிஸ்பிளே கொண்ட டிவியை இன்பினிக்ஸ் அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவிக்கு இந்தியாவில் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும்.

மேலும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் 32 இன்ச் QLED டிவி ஆனது வெப்ஓஎஸ் (WebOS) மூலம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு தரமான மென்பொருள் வசதியுடன் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் 32 இன்ச் QLED டிவி அறிமுகம் செய்யும் பிரபல நிறுவனம்!

ஸ்லிம் பாடி, ஃப்ரேம் இல்லாத வடிவமைப்பு, தெளிவான வண்ணங்கள், வெப்ஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் 32 இன்ச் QLED டிவி வெளிவரும். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி இந்தியாவில் ரூ.12,000-க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று இணையதளத்தில் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி: இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

இந்தியாவின் முதல் 32 இன்ச் QLED டிவி அறிமுகம் செய்யும் பிரபல நிறுவனம்!

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு மியாமி ஆரஞ்சு, அரோரா ப்ளூ மற்றும் நைட் பிளாக் போன்ற நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும்.

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை ஸகேனர், பெரிய டிஸ்பிளே எனப் பல சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix to launch India's first 32 inch QLED TV soon; Price and features leaked online: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X