புது TV, லேப்டாப் வாங்குற பிளான் இருந்தா.. அக்.12 தான் சரியான நாள்!

|

பண்டிகை காலத்தில் புது பொருட்களை வாங்குவதில் இந்தியர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், ஆசைகளையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது!

அப்படியாக, இந்த 2022 தீபாவளி பண்டிகை காலத்தில், ஒரு புதிய ஸ்மார்ட் டிவியையோ அல்லது புதிய லேப்டாப்பையோ வாங்கலாம் என்கிற ஐடியாவில் இருந்தால்.. அக்.12 தான் அதற்கான சரியான நாள்!

ஏனென்றால்?

ஏனென்றால்?

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இன்பினிக்ஸ் நிறுவனம், அதன் மற்ற தயாரிப்புகளுக்கு கிடைக்கும் வரவேற்பை மனதிற்கொண்டு ஒரு புதிய ஸ்மார்ட் டிவி மற்றும் லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளது!

மேற்கூறிய இரண்டு இன்பினிக்ஸ் தயாரிப்புகளுமே அக்.12 ஆம் தேதி யன்று, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன!

ரூ.30,000 பட்ஜெட்டில் புது iPhone.. அதுவும் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன்!ரூ.30,000 பட்ஜெட்டில் புது iPhone.. அதுவும் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன்!

என்ன டிவி.. என்ன லேப்டாப்?

என்ன டிவி.. என்ன லேப்டாப்?

நினைவூட்டும் வண்ணம், இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு தான் ஸ்மார்ட் டிவி மற்றும் லேப்டாப் சந்தையில் இணைந்தது.

அதனொரு பகுதியாக அதன் Infinix INBook X2 Plus மற்றும் Infinix 43Y1 TV அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு புதிய தயாரிப்புகளும் என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

Infinix INBook X2 Plus லேப்டாப்பின் அம்சங்கள்:

Infinix INBook X2 Plus லேப்டாப்பின் அம்சங்கள்:

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப் ஆனது FHD ரெசல்யூஷன், 300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை வழங்கும் 15- இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.

அலுமினியம் அலாய் மெட்டல் யூனிபாடியை கொண்டிருக்கும் இந்த லேப்டாப்பின் எடை 1.58 கிலோ இருக்கும். சுவாரசியமாக இதில் எல்இடி ஃபிளாஷை பேக் செய்யும் 1080p வெப்கேம் இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உஷார்! வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி! தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!உஷார்! வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி! தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!

ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு!

ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு!

இன்பினிக்ஸ் INBook X2 Plus ஆனது USB-C கனெக்ஷனின் கீழ் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும், 50WHr பேட்டரியையும் கொண்டிருக்கும் என்றும் ஒரு வதந்தி பரவுகிறது.

மேலும் இந்த லேப்டாப் அந்த லைட்டெட் கீபோர்ட் (Lighted Keyboard) உடன் வரும் என்றும், 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது!

Infinix 43Y1 ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்:

Infinix 43Y1 ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்:

பெயர் குறிப்பிடுவது போலவே இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி ஆனது, 43-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்ட ஒரு ஸ்மார்ட் டிவி மாடல் ஆகும்.

சிறிய அளவிலான பெசல்களால் "சூழப்பட்டுள்ள" இதன் டிஸ்பிளே FHD ரெசல்யூஷன் உடன் 300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை வழங்கும் என்பது தெரியவந்துள்ளது.

இந்திய மக்களுக்கு இன்னொரு தீபாவளி பரிசு! எல்லாம் 5G வந்த நேரம்!இந்திய மக்களுக்கு இன்னொரு தீபாவளி பரிசு! எல்லாம் 5G வந்த நேரம்!

ஓடிடி நன்மைகள்

ஓடிடி நன்மைகள்

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி, உங்களின் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் ப்ரீஇன்ஸ்டால்டு ஆப்களையும் பேக் செய்யும்.

அதாவது Amazon Prime Video, YouTube, SonyLiv, Zee5, ErosNow, AajTak மற்றும் Hotstar உள்ளிட்ட OTT ஆப்களை வழங்கும்.

வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்?

வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்?

மேற்கண்ட அம்சங்களை தவிர்த்து, இந்த புதிய இன்பின்க்ஸ் ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி அட்மோஸ், 512எம்பி ரேம், 4ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு ஓஎஸ், 20W ஸ்பீக்கர்ஸ் போன்ற அம்சங்களையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதாவது இன்பினிக்ஸ் 32ஒய்1 டிவியில் உள்ளதைப் போலவே!

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்த இரண்டு (லேப்டாப் மற்றும் டிவி) தயாரிப்புகளுமே என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும் என்கிற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை!

Photo Courtesy: Infinix

Best Mobiles in India

English summary
Infinix New 15 inch Laptop INBook X2 Plus And New 43 inch Smart TV 43Y1 India Launch on October 12th

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X