சுண்டி இழுக்கும் விலை.. பார்க்க செம்ம சீன்-ஆ இருக்கு.. Infinix புதிய Slim லேப்டாப்.. இந்திய விற்பனை ஆரம்பம்!
கடந்த வாரம், இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை லேப்டாப் ஆக இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் (INBook X2 Slim) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தம் 6 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த லேப்டாப்பின் இந்திய விற்பனை இன்று (ஜூன் 9) முதல் தொடங்கியுள்ளது.
1டிபி வரையிலான ஸ்டோரேஜ், 16ஜிபி வரையிலான ரேம், அலுமினியம் அலாய் ஃபினிஷ் (Aluminum alloy finish) மற்றும் பேக்லிட் கீபோர்டு (Backlit keyboard) ஆகியவற்றை கொண்டுள்ள இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப்பின் 6 வேரியண்ட்களுமே தற்போது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனை செய்யப்படுகின்றன.

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப் முக்கிய அம்சங்கள்: இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் லேப்டாப் ஆனது 1080 x 1920 பிக்சல் ரெசல்யூஷனை 14-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளேவை (14inch FHD Display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸையும் (Peak Brightness) வழங்குகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த லேப்டாப் மொத்தம் 6 வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது. அவைகள் வெவ்வேறு ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் 11த் ஜெனெரஷன் இன்டெல் கோர் ஐ3, இன்டெல் கோர் ஐ5 மற்றும் இன்டெல் கோர் ஐ7 சிப்செட்கள் மூலம் இயக்கப்படுகின்றன.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, 2 ரேம் விருப்பங்கள் (8ஜிபி, 16ஜிபி) மற்றும் 3 இன்டர்னல் ஸ்டோரேஜ் விருப்பங்களில் (256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி) வருகிறது. மேலும் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப் ஆனது விண்டோஸ் 11 ஹோம் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது.
சுவாரசியமாக, பட்ஜெட் விலை லேப்டாப் ஆக இருந்தாலும் கூட இது வீடியோ காலிங்கிற்காக டூயல்-ஸ்டார் எல்இடி ஃபில் லைட்களுடன் கூடிய எச்டி வெப்கேமையும் கொண்டுள்ளது. இதுதவிர்த்து ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டிடிஎஸ் ஆடியோ செயலாக்கத்துடன் 2 டிஜிட்டல் மைக்ரோஃபோன்களையும் கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை, இந்த லேப்டாப் 65W பிடி 3.0 டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 50Wh பேட்டரியை பேக் செய்கிறது. கடைசியாக இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப் ஆனது ரெட், க்ரீன், சில்வர் மற்றும் ப்ளூ ஆகிய 4 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப் விலை விவரங்கள்: ஐ3 ப்ராசஸர் (i3 Processor) உடன் 8ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.29,990 ஆகும். அதே ஐ3 ப்ராசஸர் உடன் 8ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் வேரியண்ட்டின் விலை ரூ 31,990 ஆகும்.
ஐ5 ப்ராசஸர் (i5 Processor) உடன் 16ஜிபி ரேம் + 512ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.38,990 ஆகும். அதே ஐ5 ப்ராசஸர் உடன் 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜுடன் வரும் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப்பின் விலை ரூ 40,990 ஆகும்.
கடைசியாக ஐ7 ப்ராசஸர் (i7 Processor) உடன் 16ஜிபி ரேம் + 512ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.48,990 ஆகும். அதே ஐ7 ப்ராசஸர் உடன் 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜுடன் வரும் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப்பின் விலை ரூ 50,990 ஆகும்.


Click it and Unblock the Notifications