Home
Gadgets

மார்க்கெட்டே மிரள போகுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது இன்பினிக்ஸ் 5ஜி போன்..

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி பிளஸ் (Infinix Hot 70 Pro 5G Plus) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 4-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த புதிய இன்பினிக்ஸ் போனின் விலை மற்றும் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி பிளஸ் அம்சங்கள் (Infinix Hot 70 Pro 5G Plus specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7100 5ஜி சிப் (MediaTek Dimensity 7100 5G chip) உடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புது இன்பினிக்ஸ் 5ஜி போன்..

6.76-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி Sony IMX882 மெயின் கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

XOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

8ஜிபி வரை மற்றும் 256ஜி வரை மெமரி உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸலாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளன.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புது இன்பினிக்ஸ் 5ஜி போன்..

6000எம்ஏஎச் பேட்டரி உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த போன் வெளியாகும்.

இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.19,999 விலையில் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Infinix HOT 70 Pro 5G Price Leaked Ahead India Launch Check Specifications Also
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X