பட்ஜெட் விலையில் இதய துடிப்பு சென்சார் கொண்ட இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5அறிமுகம்.!

|

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அனைத்து சாதனங்களையும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதன்படி தற்சமயம் இந்நிறுவனம் இந்தியாவில் பேண்ட் 5 ஃபிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது ஜீன் மாதத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்பேண்ட் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

 இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5

இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடலில் 0.96 இன்ச் கலர் ஸ்கிரீன் இதய துடிப்பு சென்சார்,வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

TFT-LCD ஸ்கிரீன்

TFT-LCD ஸ்கிரீன்

இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடல் பொதுவாக 0.96 இன்ச் 160x80 பிக்சல் TFT-LCD ஸ்கிரீன் வசதியுடன் வெளிவந்துள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஒ.எஸ் 9.0 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களுடன் வேலை செய்யும்.

சரியான போட்டி: ரியல்மி X2 ப்ரோ Vs ரெட்மி K20 ப்ரோ: எது சிறந்தது?சரியான போட்டி: ரியல்மி X2 ப்ரோ Vs ரெட்மி K20 ப்ரோ: எது சிறந்தது?

ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன்

ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன்

இந்த சாதனம் ஸ்டெப் கவுண்ட், ஸ்லீப் டிராக்கிங்,கலோரி கன்சம்ப்ஷன் டேட்டா, டிஸ்பிளே நேரம்/தேதி அலாரம் கடிகாரம், ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன் போன்ற நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூடூத் 4.0

ப்ளூடூத் 4.0

மேலும் ப்ளூடூத் 4.0, செடன்ட்டரி ரிமைண்டர், இதய துடிப்பு சென்சார்,3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்,வாட்டர் ரெசிஸ்டண்ட்
உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம். குறிப்பாக ஏழு நாட்கள் பேட்டரி பேக்கப், 22 நாட்களுக்கு ஸ்டான்ட்பை வசதியை கொண்டுள்ளது இந்த சானம்.

பிளாக், புளூ மற்றும் ரெட்

பிளாக், புளூ மற்றும் ரெட்

இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடலின் விலையைப் பொறுத்தவரை ரூ.17,999-ஆக உள்ளது, பின்பு பிளாக், புளூ மற்றும் ரெட் நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும். வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இதன் விற்பனை துவங்குகிறது.

Best Mobiles in India

English summary
Infinix Band 5 smart band takes on Xiaomi Mi Band 4, priced at Rs 1,799 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X