Home
Gadgets

பழைய டிவி கதை முடிந்தது.. 65 இன்ச் டிவிக்கு 32 சதவீத விலை குறைப்பு.. QLED டிஸ்பிளே.. கூகுள் TV OS. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் பட்ஜெட் விலையில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. இதில் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் டிவிகள் மற்ற நிறுவனங்கள் கொடுக்கும் விலையைவிட கிட்டத்தட்ட பாதி விலைக்கு கிடைக்கின்றன. இப்போது, 32 சதவீத டிஸ்கவுண்ட் போக நம்ப முடியாத விலைக்கு 65 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்டி டிவி வாங்க கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் 65 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி4கே டிவிக்கு (Infinix 65 inch QLED Ultra HD 4K TV) 32 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு ரூ.36,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, மேலும் கம்மியான விலைக்கு இந்த 65 இன்ச் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம்.

பழைய டிவி கதை முடிந்தது.. 65 இன்ச் டிவிக்கு 32 சதவீத விலை குறைப்பு!

இன்பினிக்ஸ் 65 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Infinix 65 inch QLED TV Specifications): 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த டிவி கொண்டுள்ளது. இதில் அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும் டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10 (HDR10) கொண்டுள்ளது.

என்டிஎஸ்சி வைடு கலர் காமட் (NTSC Wide Colour Gamut) மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கொடுக்கிறது. ஆகவே, ரிச் கலர் அனுபவம் மற்றும் நேச்சுரல் வீடியோ அவுட்புட் கொடுக்கப்படும், பெசல்-லெஸ் டிசைன் வருவதால், பிரீமியம் அவுட்புட் கொடுக்கும். மேலும் குவாண்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot technology) இந்த கியூஎல்டி டிவிக்கு கிடைக்கிறது.

அல்ட்ரா எச்டி என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க இந்த டிவிக்கு எபிக் என்ஜின் (Epic Engine) கிடைக்கிறது. 48 W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்களை இந்த இன்பினிக்ஸ் 65 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. இந்த ஸ்பீக்கர்களுக்கு டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) இந்த டிவிக்கு கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் உள்ளது.

கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), குரோம்காஸ்ட் மட்டுமல்லாமல், கூகுள் பிளே ஸ்டோர் வழியாக நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ ( Prime Video) போன்ற ஓடிடி ஆப்களை இந்த இன்பினிக்ஸ் 65 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுத்துள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் உடன் குவாட் கோர் ப்ராசஸர் கிடைக்கிறது.

கூகுள் ஹோம் ஆப் (Google Home App) பயன்படுத்தலாம். டூயல் பேண்ட் வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை இந்த இன்பினிக்ஸ் 65 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. மேலும், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (3 HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (2 USB Ports) மற்றும் எல்ஏஎன் (LAN) கனெக்டிவிட்டிகள் கொண்டுள்ளது. மேலும், ஆப்டிகல் ஆடியோ (Optical Audio) உள்ளது.

ஆடியோ வீடியோ இன் (Audio Video IN), ஆர்எப் (RF) மற்றும் 3.5 எம்எம் ஜாக் கிடைக்கிறது. இதை ஆடியோவுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த இன்பினிக்ஸ் 65 இன்ச் கியூஎல்இடி டிவி ஆனது 65GU2Q மாடல் மற்றும் 2025 எடிஷனாகும். பிளாக் கலரில் விற்பனை செய்யப்படுகிறது. 1 வருட வாரண்டி கொடுக்கப்படும். ஸ்மார்ட் ரிமோட் கொண்ட மாடலாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix 65 inch QLED Ultra HD 4K TV 2025 Edition Price Drop on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X