Home
Gadgets

43-இன்ச் ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.!

தற்போது இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சில நிறுவனங்கள் கம்மி விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன என்றுதான் கூறவேண்டும்.

பிரபல நிறுவனம்

பிரபல நிறுவனம்

இந்நிலையில் பிரபலமான இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய Infinix 43Y1 ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அட்டகாசமான அம்சங்களுடன் கம்மி விலையில் விலையில் வெளிவந்துள்ளது.

என்ன விலை?

என்ன விலை?

அதாவது இன்பினிக்ஸ் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள 43-இன்ச் Infinix 43Y1 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.13,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி விரைவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே

ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே

Infinix 43Y1 ஆனது 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். மேலும் 1,920x1,080 பிக்சல்ஸ், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 178-degree viewing angle உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடியோ எப்படி?

ஆடியோ எப்படி?

இந்த புதிய ஸ்மார்ட் டிவி தெளிவான படங்களுக்கான HLG ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். அதாவது டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

தரமான பிராசஸர்

தரமான பிராசஸர்

குவாட்-கோர் பிராசஸர் உடன் மாலி-ஜி31 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த Infinix 43Y1 மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி 4ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 யூடியூப், பிரைம் வீடியோ

யூடியூப், பிரைம் வீடியோ

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5, ஆஜ் தக், சோனி LIV, ஈரோஸ் நவ், ஹங்காமா உள்ளிட்ட பல ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். அதேபோல் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இந்த ஸ்மார்ட் டிவியில் தெளிவாகப் பார்க்க முடியும்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

வைஃபை, லேன், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், RF இன்புட், AV இன்புட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த Infinix 43Y1 ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நிறுவனம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Infinix 43Y1 Smart TV launched in India at Rs.13,499: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X