ரூ.13,999-விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை இறக்கிவிட்ட பிரபல நிறுவனம்.! இன்னைக்கே வாங்கிருங்க!
இன்பினிக்ஸ் நிறுவனம் பண்டிகை காலத்தில் அதன் கம்மி விலை Infinix 43Y1 Smart TV மாடலை அறிமுகம் செய்தது. ஆனால் தற்போது தான் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வந்துள்ளது.

நவம்பர் 15..
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நவம்பர் 15-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது 43-இன்ச் Infinix 43Y1 ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த டிவியை ரூ.13,999-க்கு வாங்க கிடைக்கும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் 5 சதவீதம்கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த 43-இன்ச் Infinix 43Y1 ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே
Infinix 43Y1 ஆனது 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். மேலும் 1,920x1,080 பிக்சல்ஸ், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 178-degree viewing angle உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவி தெளிவான படங்களுக்கான HLG ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

குவாட்-கோர் பிராசஸர்
குவாட்-கோர் பிராசஸர் உடன் மாலி-ஜி31 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த Infinix 43Y1 மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி 4ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின்வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

யூடியூப், பிரைம் வீடியோ
இந்த ஸ்மார்ட் டிவியில் யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5, ஆஜ் தக், சோனி LIV, ஈரோஸ் நவ், ஹங்காமா உள்ளிட்ட பல ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். அதேபோல் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இந்த ஸ்மார்ட் டிவியில் தெளிவாகப் பார்க்க முடியும்.

வைஃபை, லேன், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், RF இன்புட், AV இன்புட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த Infinix 43Y1 ஸ்மார்ட் டிவி.

கம்மி விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களையும் வழங்குகிறது இந்த 43-இன்ச் Infinix 43Y1 ஸ்மார்ட் டிவி மாடல். எனவே ஒரு நல்ல 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் பயனர்கள் இதை வாங்குவது நல்லது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications