Home
Gadgets

பிச்சிக்குது விற்பனை.. QLED டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. கம்மி விலையில் 4கே டிவி.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. அதாவது சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் நிறுவனங்களை விட கம்மி விலையில் அசத்தலான சாதனங்களை இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்நிலையில் இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின கியூஎல்இடி(QLED) டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இன்பினிக்ஸ் 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு இந்த டிவி ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

 டால்பி ஆடியோ.. கம்மி விலையில் 4கே டிவி.. எந்த மாடல்?

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த இன்பினிக்ஸ் 43-இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவியை ரூ.19,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி ஆனது 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே அம்சம் இருப்பதால் ஒரு தியேட்டர் அனுபவம் கிடைக்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் குவாண்டம் டாட் டெக்னாலஜி, எச்டிஆர் 10 ஆதரவு, 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக ஐஎம்ஜி பிஎக்ஸ்இ4 ஜிபியு (IMG BXE4 GPU) கிராபிக்ஸ் பிராசஸர் உடன் இந்த 3-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி கேமிங் வசதிக்கு மிகவும் அருமையாகப் பயன்படும்.

மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் ரியல்டெக் பிராசஸர் உடன் 8ஜிபி ரோம் வசதி உள்ளது. வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் உடன் 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ரிமோட்டில் பல்வேறு சிறப்பான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

வெப்ஓஎஸ் மூலம் இயங்குகிறது இன்பினிக்ஸ் 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி. இந்த இயங்குதளத்தில் மேம்பட்ட பல்வேறு புதிய அம்சங்கள் கிடைக்கும். இந்த இன்பினிக்ஸ் டிவியில் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். எனவே இந்த டிவியை நம்பி வாங்கலாம்.

கிளியர் வாய்ஸ் டெக்னாலஜி மற்றும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

 டால்பி ஆடியோ.. கம்மி விலையில் 4கே டிவி.. எந்த மாடல்?

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த இன்பினிக்ஸ் 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி.

மேலும் இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் சாதனங்கள் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix 43-inch QLED Ultra HD 4K Smart TV is available at 33 percent off on Flipkart: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X