வீட்டுக்கு 2 டிவி.. ரூ.16,249 ஆஃபர் ரேட்ல QLED டிவி.. Google TV ஓஎஸ்.. டால்பி ஆடியோ, எச்டிஆர் 10.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் கியூஎல்இடி டிவி மாடல்கள் மலிவான விலையில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக மேலும் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இதில் இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி டிவி (Infinix 43 inch QLED TV) மாடலின் விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 12 சதவீத தள்ளுபடி விலையில் இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Infinix 43 inch QLED Ultra HD 4K Smart Google TV) கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.17,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.1,250 தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது.

ஆகவே, ரூ.16,249 விலைக்கு இந்த இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம். 43GU3Q மாடல் மற்றும் 2024 எடிஷனாக விற்பனைக்கு கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்டுள்ளது. ஆகவே, கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மற்றும் பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) கொடுக்கப்பட்டு உள்ளது.
இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Infinix 43 inch QLED TV Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும், 60 Hz ரெஃப்ரெஷ் கேட், 4கே அல்ட்ரா எச்டி (4K UHD) ரெசொலூஷன் மற்றும் 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. எச்டிஆர் 10 (HDR 10) மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கொடுக்கப்பட்டு உள்ளது.
எபிக் என்ஜின் (Epic Engine), கூகுள் ஹோம் ஆப் (Google Home App) கிடைத்துள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் கொடுக்கப்பட்டு உள்ளதால் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கும். வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட்டை இந்த இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுக்கும். மேலும், இன்-பில்ட் ஓடிடி ஆப்களும் கிடைத்துள்ளன.
நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் யூடியூப் (YouTube) ஆகிய ஓடிடி ஆப்கள் வருகின்றன. குவாட் கோர் ப்ராசஸர் (QUAD Core Processor) இந்த இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்துள்ளது.
2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும், ப்ளூடூத் (Bluetooth), ஈதர்நெட் (Ethernet), பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi), ஆட்டோ பவர் ஆஃப் (Auto Power off) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கொடுக்கப்பட்டு உள்ளது. 40 W ஆடியோ அவுட் கொண்ட 2 ஸ்பீக்கர்களை இந்த இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுத்துள்ளது.
டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்டுள்ளது. 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 1 ஏஆர்சி எச்டிஎம்ஐ போர்ட் (ARC HDMI Port) மற்றும் 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports) கிடைக்கின்றன. எல்ஏஎன் (LAN), டிஜிட்டல் ஆடியோ (Digital Audio), ஏவி இன் (AV IN) மற்றும் ஆர்எப் (RF) ஆகிய கனெக்டிவிட்டிகளையும் இந்த 43 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








