ஆர்டர் அள்ள போகுது.. ரூ.16999 பட்ஜெட்ல QLED டிஸ்பிளே.. 16ஜிபி மெமரி.. டால்பி அட்மாஸ்.. ஆஃபரில் 43 இன்ச் டிவி..
இந்தியாவில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. அதுவும் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் 43 இன்ச் QLED டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி அர்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Infinix 43 inch QLED Ultra HD 4K Smart Google TV) மாடலுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

இன்பினிக்ஸ் 43 இன்ச் 4கே கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Infinix 43 inch QLED 4K Smart Google TV Specifications): இன்பினிக்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4கே கியூஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 (HDR 10), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178 degree viewing angle) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.
குவாட் கோர் பிராசஸர் (QUAD Core Processor) உடன் 43 இன்ச் கியூஎல்இடி அர்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி52எம்சி1 (Mali-G52MC1) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. அதேபோல் இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த இன்பினிக்ஸ் டிவி இயங்குகிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்றவற்றை இதில் பயன்படுத்த முடியும். பின்பு நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் போன்ற இன்-பில்ட் ஆப்கள் கொண்டுள்ளது இந்த டிவி.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டிவி. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 40W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்தது இந்த இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி அர்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி. இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
அதேபோல் 3 யுஎஸ்பி போர்ட் (USB Port), யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. பின்பு பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன. இதுதவிர பல்வேறு அசத்தலான அம்சங்கள் இந்த இன்பினிக்ஸ் 43 இன்ச் 4கே கியூஎல்இடி ஸ்மார்ட் டிவியில் உள்ளன.
40W ஸ்பீக்கர்கள், 16ஜிபி மெமரி, 4கே கியூஎல்இடி டிஸ்பிளே, கூகுள் டிவி ஓஎஸ், டால்பி ஆடியோ உள்ளிட்ட அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications