இறங்கி அடித்த பிளிப்கார்ட்.. கூகுள் டிவி OS.. 40W ஸ்பீக்கர்கள்.. மலிவு விலையில் Infinix டிவி.. எந்த மாடல்?
தீபாவளி பண்டிகை முடிந்தும் கூட பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Infinix 43 inch QLED Full HD Smart Google TV) ஆனது முன்பு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் big bang diwali sale எனும் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட் டிவி ரூ.14,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.13499 விலையில் வாங்கிவிட முடியும்.

இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Infinix 43 inch QLED Google TV Specifications): இன்பினிக்ஸ் 43-இன்ச் கியூஎல்இடி டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 (HDR 10), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது.
சக்திவாய்ந்த குவாட் கோர் பிராசஸர் (QUAD Core Processor) உடன் இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி 470 ட்ரிபிள் கோர் (Mali470 Triple Core) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். அதேபோல் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.
குறிப்பாக டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 40W பாக்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்தது இந்த 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல்.
மேலும் 3 யுஎஸ்பி போர்ட் (USB Port), யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications








