வீட்டுக்கு வீடு ஆர்டர்.. ஆஃபரில் ரூ.17,811 க்கு 43 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றன. ஏனென்றால், மற்ற நிறுவனங்களில் கிடைக்கும் அதே பீச்சர்களுடன் மலிவான விலைக்கு இவை வெளியாகி வருகின்றன. இதில் இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Infinix 43 inch QLED Full HD Smart Google TV) தள்ளுபடி விலைக்கு வந்துள்ளது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 22 சதவீத தள்ளுபடி போக இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,499 விலைக்கு வாங்க முடியும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,688 தள்ளுபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ரூ.17,811 விலைக்கு இந்த 43 இன்ச் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ள முடியும்.

இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Infinix 43 inch QLED Full HD Smart Google TV Specifications): பெசல்-லெஸ் டிசைன் (Bezel-less Design) கொண்ட மாடலாக கிடைக்கிறது. 43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே மற்றும் 60Hz ரெஃப்ரெஸ் ரேட் கிடைக்கிறது. ஃபுல் எச்டி (Full HD) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கொண்ட மாடலாகவும் இந்த இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் குவாட் கோர் ப்ராஸசர் (QUAD Core Processor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மாலி 470 டிரிபிள் கோர் ஜிபியு (Mali 470 Triple Core GPU) கிடைக்கிறது.
கூகுள் டிவி ஓஎஸ் கிடைப்பதால், 10000+ ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கொண்டுள்ளது. ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் கொண்ட ரிமோட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி இருக்கிறது. எச்டிஆர் 10 (HDR 10) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 40W ஆடியோ அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த ஸ்பீக்கர்களுக்கு டால்பி ஆடியோ (Dolby Audio) சவுண்ட் டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் பக்கா ஆடியோ அனுபவத்தை இந்த இன்பினிக்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுக்கும். ப்ளூடூத் (Bluetooth), ஈதர்நெட் (Ethernet), பில்ட் - இன் - வை-பை (Built-in Wi-Fi) கனெக்டிவிட்டி உள்ளன. எச்டிஎம்ஐ (HDMI), யூஎஸ்பி (USB) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
