யார்யா நீங்கெல்லாம்.. ரூ.13,999 பட்ஜெட்டில் 40 இன்ச் QLED டிவி.. டால்பி ஆடியோ.. 4ஜிபி மெமரி.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி (Infinix 40Y1V QLED TV) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான அம்சங்கள் மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. இப்போது இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Infinix 40Y1V QLED TV Specifications): ஃபுல் எச்டி கியூஎல்இடி டிஸ்பிளே கொண்ட இந்த 40 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பெசல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி மாடல். மேலும் டால்பி ஆடியோ (Dolby Audio) அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. பின்பு 16W டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த டிவி அசத்தலான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
குவாட் கோர் (quad core) பிராசஸர் வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி31 ஜிபியு (Mali G31 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இது சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.
4ஜிபி மெமரி வசதியுடன் இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), யூடியூப் (YouTube), ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar), சோனிலிவ் (SonyLIV) போன்ற பல பிரபலமான ஸ்ட்ரீமிங் தளங்களைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி மாடல்.
இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், யுஎஸ்பி போர்ட், வைஃபை, ஆர்எஃப் போர்ட், ஏவி போர்ட், 3.5எமஎம் ஆடியோ ஜாக், ஜிட்டல் ஆப்டிகல் ஆடியோ அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
இன்பினிக்ஸ் 40ஒய்1வி கியூஎல்இடி டிவி ஸ்மார்ட் ஆனது ரூ.13,999 விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஆனால் ஆரம்ப வெளியீட்டிற்குப் பிறகு விலையில் சிறிது ஏற்றம் காணப்படலாம். குறிப்பாக வரும் மார்ச் 1-ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பிரபலமான ஆன்லைன் தளங்களில் இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரும்.
குறிப்பாக கம்மி விலையில் இந்த கியூஎல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும். அதேபோல் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவி மாடலுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








