கம்மி விலையில் அறிமுகமான Infinix 32-இன்ச் ஸ்மார்ட் டிவி: நம்பி வாங்கலாமா?
தற்போது இந்தியாவில் 43-இன்ச, 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சியோமி, சாம்சங், நோக்கியா போன்ற பல நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தரமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன.

இன்பினிக்ஸ் நிறுவனம்
அதேபோல் சியோமி, சாம்சங், நோக்கியா போன்ற நிறுவனங்கள் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை சற்று உயர்வான விலையில் தான் அறிமுகம் செய்கிறது. ஆனால் இந்நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் கம்மி விலையில் ஒரு 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

Infinix 32Y1 ஸ்மாரட் டிவி
அதாவது Infinix 32Y1 எனும் ஸ்மாரட் டிவியை தான் அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். தற்போது இந்த ஸ்மார்ட் டிவியின்அம்சங்கள் என்னென்ன? என்ன விலை? நம்பி வாங்கலாமா அல்லது வாங்கக் கூடாத? என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாம் எதிர்பாரத்த டிஸ்பிளே அம்சங்கள்
இந்த இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி மாடலின் டிஸ்பிளே வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி எச்டி ரெடி எல்இடி டிஸ்பிளே மற்றும் 1366 x 768 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி உங்களுக்கு சிறந்ததிரை அனுபவத்தை கொடுக்கும்.
இதுதவிர எச்டி ரெசல்யூசன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பெசல்-லெஸ் ஃப்ரேம் என்ற அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இன்பினிக்ஸ் 32Y1இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி. ஆனால் இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

250 நிட்ஸ் ப்ரைட்னஸ்
இன்பினிக்ஸ் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவியில் 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 1200 (Typ) கான்ட்ராஸ்ட் ரேஷியோ அம்சங்கள் உள்ளன. எனவேஇதன் மூலம் நீங்கள் தெளிவான படங்களை பார்க்க முடியும். பின்பு டிஸ்பிளேவை விட இதன் மென்பொருள் வசதி மிகவும் அருமையாக இருக்கிறது.

தரமான பிராசஸர்
அதாவது இன்பினிக்ஸ்32Y1 ஸ்மார்ட் டிவி மாடல் குவாட்-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இதே போன்றபிராசஸர் வசதி தான் சற்று உயர்வான டிவிகளிலும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த பிராசஸர் வசதியுடன் டிவியை இயக்குவதற்கு அருமையாகஇருக்கும்.
அதேசமயம் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவுகிறது குவாட்-கோர் பிராசஸர். மேலும் தனித்துவம் வாய்ந்த Linux இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி.
இதுதவிர மாலி-ஜி31 கிராஃபிக் பிராஸசர் வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதன்
மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

ஸ்டோரேஜ் வசதி
512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி. ஆனால் 512எம்பி ரேம்-க்கு பதிலாக1ஜிபி அல்லது 2ஜிபி ரேம் வசதி கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்கள்?
யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ 5, சோனி LIV, ஈரோஸ் நவ், ஹங்காமா, ப்ளெக்ஸ், YuppTV போன்ற ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி. எனவே ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இந்த ஸ்மார்ட் டிவி உதவியுடன் எளிமையாக பார்க்க முடியும்.
இதுபோன்ற ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்களை சில 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் தருவதில்லை என்றே கூறலாம். குறிப்பாக ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்கள் இருக்கும் ஸ்மார்ட்
டிவிகளுக்கு தான் இப்போது நல்ல வரவேற்பு உள்ளது.

வியக்கவைக்கும் ரிமோட்
32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் நாம் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் ரிமோட் கிடைப்பதில்லை. ஆனால் இந்த இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவியின்
ரிமோட் ஆனது நாம் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதாவது இந்த டிவியின் ரிமோட் ஆனது யூடியூப் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற OTT இயங்குதளங்களின் ஹாட்கீகளைக் கொண்டுள்ளது.
மேலும் இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி ஆனது குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தஸ்மார்ட் டிவியை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.

ஆடியோ எப்படி இருக்கு?
வழக்கமாக 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் இடம்பெறும் அதே 20W ஸ்பீக்கர் அமைப்புடன் வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி. இதன்மூலம் தெளிவான ஆடியோ அனுபவத்தை பெறமுடியும். ஆனால் இதற்கு பதிலான 24W ஸ்பீக்கர் வசதி இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.குறிப்பாக இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி ஆடியோ வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பரான கனெக்டிவிட்டி
வைஃபை, 3 எச்டிஎம்ஐ போர்ட்,2 யுஎஸ்பி போர்ட், லேன், ஆப்டிகல், MiraCast போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ்
ஸ்மார்ட் டிவி. குறிப்பாக வைஃபை ஆதரவு கொண்டு ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்த அருமையாக இருக்கும்.

நம்பி வாங்கலாமா?
பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.8,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக முன்னணி நிறுவனங்கள் கூட இவ்வளவு சிறப்பான அம்சங்களுடன் கம்மி விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்தது கிடையாது.
அதாவது சியோமி, சாம்சங், ஒன்பிளஸ், நோக்கியா போன்ற நிறுங்கள் ரூ.15,000-விலைக்குள் இதே அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் டிவிகளை தான் அறிமுகம் செய்கின்றன. ஆனால் இந்த இன்பினிக்ஸ் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களுடனும் இந்த இன்பினிக்ஸ் 32Y1 டிவியை கம்மி விலையில் அறிமுகம்
செய்துள்ளது. எனவே இந்த இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications