Home
Gadgets

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. ரூ.9,499 போதும்.. டால்பி ஆடியோ.. புதிய Infinix ஸ்மார்ட் டிவி அறிமுகம்..

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் டிவிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் புதிய இன்பினிக்ஸ் 32ஒய்1 பிளஸ் ஸ்மார்ட் டிவியை (Infinix 32Y1 Plus Smart TV) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

இன்பினிக்ஸ் 32ஒய்1 பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி ஆடியோ, குவாட்-கோர் பிராசஸர் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. Infinix ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

இன்பினிக்ஸ் 32ஒய்1 பிளஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் ( Infinix 32Y1 Plus Smart TV specifications): எச்டி-ரெடி எல்இடி டிஸ்பிளே (LED display) வசதியுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் 32ஒய்1 பிளஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 200 நிட்ஸ் ப்ரைட்னஸ், விவிட் டிஸ்பிளே கலர்ஸ் ( vivid display colors) மற்றும் பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக சிறந்த திரை அனுபவம் வழங்கும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி.

குறிப்பாக இன்பினிக்ஸ் 32ஒய்1 பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடலில் டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 16 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன. அதுவும் இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (stereo speakers) உள்ளதால் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். குறிப்பாக இந்த டிவியின் ஆடியோ பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

512ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் 32ஒய்1 பிளஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் ஜியோ சினிமா (JioCinema), ஹாட்ஸ்டார் (Hotstar), பிரைம் வீடியோ (Prime Video) சோனிலிவ்(Sony LIV), ஈராஸ்நவ் (ErosNow), யூடியூப் (YouTube) போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் தளங்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

இந்த புதிய இன்பினிக்ஸ் 32ஒய்1 பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது குவாட்-கோர் பிராசஸர் ( Quad-Core processor) உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த டிவியின அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

மிராகாஸ்ட்(Miracast) ஆதரவுடன் இந்த அசத்தலான இன்பினிக்ஸ் 32ஒய்1 பிளஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் தனித்துவமான ரிமோட் வசதியுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. அதாவது ஓடிடி தளங்களில் ஷார்ட் கட் பட்டன்கள் மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட்.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. Infinix ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

இரண்டு எச்டிஎம் போர்ட்கள் (HDMI ports), இரண்டு யுஎஸ்பி போர்ட்கள் (USB ports), ஹெட்ஃபோன் ஜாக் (headphone jack), லேன் (LAN), எச்டிஎம்ஐ ஏஆர்சி (HDMI ARC) உள்ளிட்ட பல்வேறு பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன. இதுதவிர பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் 32ஒய்1 பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இன்பினிக்ஸ் 32ஒய்1 பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.9,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 24-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் இந்த அசத்தலான இன்பினிக்ஸ். மேலும் இந்த புதிய டிவிக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Infinix 32Y1 Plus Smart TV With Dolby Audio support Sale From June 24 in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X