2026 ஆரம்பமே மிரளுது.. 47 சதவீத ஆஃபரில் Infinix HD QLED டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் 32ஜிஎச்3கியூ 31 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் ஆனது நம்ப முடியாத விலை குறைப்பில் கிடைக்கிறது. கியூஎல்இடி டிஸ்பிளே போக டால்பி ஆடியோ, எபிக் என்ஜின், பில்ட்-இன் குரோம்காஸ்ட் போன்ற பீச்சர்களுடன் வெளிவந்துள்ளது. இந்த டிவிக்கு கொடுக்கப்பட்டுள்ள விலை குறைப்பு மற்றும் அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 47 சதவீத டிஸ்கவுண்ட் போக இன்பினிக்ஸ் 32ஜிஎச்3கியூ 31 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (Infinix 32GH3Q 32 inch QLED Smart Google TV 2025) கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் போக ரூ.8,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.441 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவாக வாங்கலாம்.

இன்பினிக்ஸ் 32ஜிஎச்3கியூ 31 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 அம்சங்கள் (Infinix 32GH3Q 32 inch QLED Smart Google TV 2025 Specifications): 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த இன்பினிக்ஸ் 32ஜிஎச்3கியூ 31 இன்ச் டிவி கொண்டுள்ளது. மேலும், 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. எச்டி (HD) ரொசொலூஷன் வருகிறது.
எபிக் இமேஜ் என்ஜின் (EPIC Image Engine) கொண்டுள்ளது. பெசல் லெஸ் டிசைனில் வாங்க கிடைக்கிறது. 20 W சவுண்ட் அவுட்புட் மற்றும் டால்பி ஆடியோவை (Dolby Audio) இந்த இன்பினிக்ஸ் 32ஜிஎச்3கியூ 31 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் கொடுத்துள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் ஆர்ம் குவாட் கோர் ஏ55 (ARM QUAD CORE A55) சிப்செட் உள்ளது.
கூகுள் டிவி ஓஎஸ் கொடுக்கப்பட்டுள்ளதால், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆப்கள் கிடைக்கின்றன. மேலும், பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் யூடியூப் (YouTube) கிடைத்துள்ளது. கூகுள் ஹோம் ஆப் (Google Home APP) மற்றும் பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) கொடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) இந்த இன்பினிக்ஸ் 32ஜிஎச்3கியூ 31 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலில் கிடைத்துள்ளது. ஆகவே, ரிமோட்டில் வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. குயிக் அக்சஸ் (Quick Access) வழியாக நெட்பிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி கீகள் இந்த இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கிறது.
டூயல் பேண்ட் வை-பை (Dual band WiFi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி ஆதரவை கொடுத்துள்ளது. மேலும், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), எல்ஏஎன் (LAN), ஆப்டிகல் ஆடியோ (Optical Audio), ஏவி இன் (AV IN) மற்றும் ஆர்எப் (RF) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்கை இந்த இன்பினிக்ஸ் 32ஜிஎச்3கியூ 31 இன்ச் கியூஎல்இடி டிவியில் வருகிறது.
32GH3Q சீரிஸ் மற்றும் 32GH3Q மாடலாக இந்த இன்பினிக்ஸ் 32ஜிஎச்3கியூ 31 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 கிடைக்கிறது. மேலும், 2025 எடிஷனாகவும், கூகுள் டிவி ஓஎஸ் மாடலாகவும் இருக்கிறது. பிளாக் கலரில் வாங்கி கொள்ளலாம். ஸ்மார்ட் டிவி மாடலாகவும் இருக்கிறது. 1 வருட வாரண்டி கொடுத்துள்ளது. பெசல் லெஸ் டிசைனில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








