Home
Gadgets

இதை விட கம்மி விலையில் 32-இன்ச் டிவி கிடைக்காது: Infinix அட்டகாச சலுகை.!

இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த வாரம் Infinix 32Y1 எனும் ஸ்மாரட் டிவியை அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட் தளத்தில் அட்டகாசமான சலுகையுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

 அசத்தலான சலுகை

அசத்தலான சலுகை

அதாவது இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.8,999-ஆக உள்ளது. குறிப்பாக இன்று முதல் பிளப்கார்ட் தளத்தில் இந்த
டிவியை வாங்க முடியும். அதேபோல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே இதன் மூலம் இந்த டிவியை ரூ.8,099-விலையில் வாங்கலாம்.

எக்ஸ்சேஞ்ச் சலுகை

இதுதவிர எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அருமையான 32-இன்ச் இன்பினிக்ஸ் டிவியை வாங்க இதுவே சரியானநேரம். மேலும் இப்போது இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

இன்பினிக்ஸ் அறிமுகம் செய்த புதிய இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி ஆனது 1366 x 768 பிக்சல்ஸ், எச்டி ரெசல்யூசன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பெசல்-லெஸ் ஃப்ரேம் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் என்றே கூறலாம். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஇன்பினிக்ஸ் நிறுவனம்.

 தரமான பிராசஸர்

தரமான பிராசஸர்

இந்த இன்பினிக்ஸ் டிவி ஆனது 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், 1200 (Typ) கான்ட்ராஸ்ட் ரேஷியோ போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. எனவேஇதன் மூலம் தெளிவான படங்களைப் பார்க்க முடியும்.

மேலும் இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது. இப்போது வரும் 55-இன்ச் டிவிகளில் கூட இதுபோன்ற பிராசஸர் வசதி தான் உள்ளது. பின்பு 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டிவி.

 ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்கள்

ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்கள்

இப்போது சில ஆப் வசதிகள் மூலம் புதிய படங்களை எளிமையாக பார்க்க முடிகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் கூட யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ 5, சோனி LIV, ஈரோஸ் நவ், ஹங்காமா, ப்ளெக்ஸ், YuppTV போன்ற ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்கள் உள்ளன. எனவே உங்களுக்கு பிடித்த
படங்களை எளிமையாக பார்க்க முடியும்.

 சூப்பரான ரிமோட்

சூப்பரான ரிமோட்

இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவிக்கு சூப்பரான ரிமோட் கண்ட்ரோல் கிடைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். அதாவது இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட் கண்ட்ரோல் ஆனது யூடியூப் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற OTT இயங்குதளங்களின் ஹாட்கீகளைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த புதிய டிவி Chromecast ஆதரவை கொண்டு வெளிவந்துள்ளது.

டால்பி ஆடியோ

டால்பி ஆடியோ

இந்த புதிய இன்பினிக்ஸ் டிவி ஆனது டால்பி ஆடியோ ஆதரவுடன் 20W ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தெளிவான ஆடியோவை பெறமுடியும். குறிப்பாக டால்பி ஆடியோ வசதியானது சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும்.

இயங்குதளம்

இயங்குதளம்

இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் வைஃபை, 3 எச்டிஎம்ஐ போர்ட்,2 யுஎஸ்பி போர்ட், லேன், ஆப்டிகல், MiraCast போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி மாடல்.

மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி அனது கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பி வாங்கலாம்

நம்பி வாங்கலாம்

சியோமி, ஒன்பிளஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட இவ்வளவு சிறப்பான அம்சங்களுடன் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யவில்லை. ஆனால் இன்பினிக்ஸ் நிறுவனம் கம்மி விலையில் தரமான அம்சங்களுடன் இந்த 32Y1 ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. எனவே இதை நம்பி வாங்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி

சமீபத்தில் புதிய இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி (Infinix Note 12 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ். குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்ட இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.
அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஸ்னோஃபால் ஒயிட் மற்றும் ஃபோர்ஸ் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Infinix 32 Y1 Smart Tv Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X