மிரளுது விற்பனை.. 2 டிவி வாங்குவீங்க.. வெறும் ரூ.8,274 போதும்.. எல்இடி ஸ்மாார்ட் டிவி.. டால்பி ஆடியோ!
"ரொம்பலாம் வேணாம், எல்இடி டிஸ்பிளே, டால்பி ஆடியோ, ஓடிடி சப்போர்ட் இது மூனும் இருக்குற மாதிரி கம்மி பட்ஜெட்ல 32 இன்ச் இருந்தா சொல்லுங்க" அப்படினு கேட்குறவங்களுக்கு இன்பினிக்ஸ் ஒய்1 ஸ்மார்ட் டிவி (Infinix Y1 Smart TV) பக்காவான தேர்வாக இருக்கும்.
இன்பினிக்ஸ் ஒய்1 ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Infinix Y1 Smart TV Specifications): இதுவொரு 32Y1 மாடல் டிவியாகும். இந்த டிவியில் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எச்டி ரெடி (HD Ready) டிஸ்பிளே வருகிறது. அதோடு எல்இடி (LED) பேனல் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 250 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த டிவியில் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. இதுவொரு ஸ்மார்ட் டிவி மட்டுமே என்பதால், ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், லினக்ஸ் (Linux) ஓஎஸ் கொண்ட குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) வருகிறது. அதோடு மாலி ஜி31 (Mali G31) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 512 எம்பி ரேம் + 4 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது.
இந்த இன்பினிக்ஸ் 32 இன்ச் டிவியில் பாக்ஸ் டைப் (Box Type) ஸ்பீக்கர் வருகிறது. அதோடு 20W ஆர்எம்எஸ் (RMS) ஆடியோ அவுட்புட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டிவியில் டால்பி ஆடியோ சவுண்ட் டெக்னாலஜி (Dolby Audio Sound Technology) சப்போர்ட் வருகிறது. ஆகவே, கிரிஸ்டல் கிளியர் ஆடியோ அனுபவத்தை இந்த டிவி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த இன்பினிக்ஸ் டிவியில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் இல்லையென்றாலும், ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும். ஆகவே, யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (Zee 5), சோனிலிவ் (Sony LIV) உள்ளிட்ட ஏராளமான ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டிவியில் ப்ளூடூத் (Blutooth), பில்ட-இன் வை-பை (Built-in Wi-Fi) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டி வருகிறது.
அதேபோல மூன்று எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், 2 யுஎஸ்பி (USB) போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack) மற்றும் ஏவி (AV) போன்ற கனெக்டிவிட்டிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், மிராகாஸ்ட் (Miracast) சப்போர்ட் வருகிறது. இந்த டிவி 3.7 கிலோ எடைக் கொண்டுள்ளது. பிளாக் (Black) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த இன்பினிக்ஸ் ஒய்1 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.8,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு மலிவான விலையில் நல்ல அம்சங்களை கொண்டிருப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. இந்த விற்பனையை மேலும் அதிகரிக்க பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மிரட்டலான தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இன்பினிக்ஸ டிவியை கனரா பேங்க் கிரெடிட் கார்டு (Canara Bank Credit Card) பயன்படுத்தி வாங்கினால், ரூ.725 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. அதோடு பழைய 32 இன்ச் டிவிக்கு ரூ.1,750 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த டிவியை வெறும் ரூ.8,274 விலையில் வாங்கி கொள்ள முடியும்.
புதுப்புது டெக்னாலஜி இல்லாமல், பக்காவான எல்இடி டிஸ்பிளே, டால்பி ஆடியோ ஸ்பீக்கர்கள், ஓடிடி ஆப்கள், ஸ்மார்ட் ரிமோட் போன்ற அம்சங்களோடு கம்மியான பட்ஜெட்டில் 32 இன்ச் டிவி வேண்டுமானால், இந்த இன்பினிக்ஸ் ஒய்1 ஸ்மார்ட் டிவி மாடலை தாராளமாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications