Home
Gadgets

பிச்சிக்குது TV விற்பனை.. 49 சதவீத ஆபரில் ரூ.8,599 க்கு LED டிவி.. 16W பாக்ஸ் ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் 32 இன்ச் டிவிகளுக்கு பாதிக்குப்பாதி தள்ளுபடி கிடைக்கிறது. இன்பினிக்ஸ் 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (Infinix 32 inch LED Smart Linux TV) தள்ளுபடியில் விலையில் பட்டையை கிளப்பி வருகிறது. பாக்ஸ் ஸ்பீக்கர்களை கொடுக்கிறது. இந்த லினக்ஸ் டிவி மாடலின் பீச்சர்கள் மற்றும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தின் ஹாட் டீலில் இன்பினிக்ஸ் 32 இன்ச் எல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (Infinix 32 inch HD Ready LED Smart Linux TV) மாடலுக்கு 49 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியில் ரூ.8,599 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ஈஎம்ஐ தள்ளுபடி கிடைக்கிறது.

பிச்சிக்குது TV விற்பனை.. 49 சதவீத ஆபரில் ரூ.8,599 க்கு LED டிவி!

ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த இன்பினிக்ஸ் 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவியை வாங்கி கொள்ளலாம். 2024 மாடலாக இருக்கிறது. 32Y1D/32Y1C/32Y1B மாடல் மற்றும் லினக்ஸ் சீரிஸ் கீழ் விற்பனைக்கு கிடைக்கிறது. லினக்ஸ் டிவி ஓஎஸ் கிடைப்பதால், ஆண்ட்ராய்டு டிவி போல பீச்சர்களை எதிர்பார்க்க முடியாது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப மட்டுமே இருக்கும்.

இருப்பினும், நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட ஓடிடி ஆப்களையும் கொடுக்கிறது. ஸ்மார்ட் ரிமோட் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், ஓடிடி ஆப்களுக்கு குயிக் அக்சஸ் கிடைக்கிறது. இந்த பட்ஜெட் விலையிலும் பெசல்-லெஸ் ஃபிரேம் (Bezel-Less Frame) கொடுத்து இருக்கிறது.

இன்பினிக்ஸ் 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி அம்சங்கள் (Infinix 32 inch LED Smart Linux TV Specifications): 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி மெமரியை இந்த இன்பினிக்ஸ் 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி கொடுத்துள்ளது. லினக்ஸ் டிவி ஓஎஸ் (Linux TV OS) மற்றும் ஸ்மார்ட் குவாட் கோர் ப்ராசஸர் (Smart Quad Core Processor) கிடைக்கிறது.

1366 x 768 பிக்சல்களுடன் எச்டி ரெடி (HD Ready) ரெசொலுஷன் கொண்ட 32 இன்ச் எல்இடி டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 250 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட்டை இந்த இன்பினிக்ஸ் 32 இன்ச் எல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி கொண்டுள்ளது. மேலும், 178 டிகிரி வியூ ஆங்கிளை பேக் செய்துள்ளது.

16 W சவுண்ட் அவுட்புட் கொடுக்கும்படி 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்களாக (Bottom Firing Speakers) இருக்கின்றன. வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் மிராகாஸ்ட் (MiraCast) கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. மேலும், எல்ஏஎன் (LAN), ஆப்டிகல் (Optical) சப்போர்ட்டை இந்த இன்பினிக்ஸ் 32 இன்ச் எல்இடி டிவி கொடுத்துள்ளது.

மேலும், எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. மலிவான விலைக்கு என்னென்ன பீச்சர்களை கொடுக்க முடியுமோ அந்த பீச்சர்களை பேக் செய்துள்ளது. பேசிக் பீச்சர்களுடன் மலிவான விலைக்கு 32 இன்ச் டிவி வேண்டுமானால், இந்த இன்பினிக்ஸ் 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவியை ஆப்ஷனில் எடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
Infinix 32 inch HD Ready LED Smart Linux TV 49 Percent Discount on Flipkart Hot Deal Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X