இது TWS இயர்பட்ஸ்-ஆ? 1.47 இன்ச் LED டிஸ்பிளே.. 13mm டிரைவர்.. பட்ஜெட்ல பட்டைய கிளப்புதே பாஸ்..
அர்பன் (URBAN) நிறுவனம் இந்தியாவில் ஒரு புதுமையான இயர்பட்ஸ் சாதனத்தை மிகமிக குறைந்த விலையில் சலுகையுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முதல் டச் டிஸ்பிளே கொண்ட TWS இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் மூலம், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை கையில் எடுக்காமலே, இந்த இயர்பட்ஸ் டிஸ்பிளே வழியாக டயல் செய்து, அழைப்புகளை மேற்கொள்ள முடியுமென்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் சாதனத்தை நிறுவனம் அர்பன் ஸ்மார்ட் TWS இயர்பட்ஸ் (URBAN Smart TWS Earbuds) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
1.47 இன்ச் LED டிஸ்பிளே.. 13mm டிரைவர் உடன் புது URBAN Smart TWS Earbuds:
ஆடியோ அனுபவத்தை வழங்கும் TWS இயர்பட்ஸ் சாதனங்களுக்கு மத்தியில், இந்த புதிய அர்பன் ஸ்மார்ட் TWS இயர்பட்ஸ் (URBAN Smart TWS Earbuds) சாதனம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. ஆடியோ அனுபவத்துடன் டச் டிஸ்பிளே அனுபவத்தை இந்த டிவைஸ் பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த இயர்பட்ஸ் 1.47" இன்ச் அளவு கொண்ட LED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது முழுக்க முழுக்க டச் அம்சத்தை கொண்டுள்ளது.

அர்பன் ஸ்மார்ட் TWS இயர்பட்ஸ் (URBAN Smart TWS Earbuds):
இந்த புதிய அர்பன் ஸ்மார்ட் TWS இயர்பட்ஸ் (URBAN Smart TWS Earbuds) சாதனம் 13mm AI ஸ்மார்ட் ஆடியோ டிரைவர்ஸ்களை கொண்டுள்ளது. இது ஸ்பேஷியல் 3D ஆடியோ (Spatial 3D Surround Sound) ஆதரவையும் வழங்குகிறது. இது ப்ளூடூத் கால்லிங் அம்சத்துடன் ஆன் கேஸ் டச் டிஸ்பிளே ஆதரவை வழங்குகிறது. இதில் டயல் பேட் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.
48 மணிநேர பிளேபேக் டைம்:
இந்த URBAN Smart TWS Earbuds சாதனம் 48 மணி நேர டாக் டைம் உடன் 150 மணி நேர ஸ்டாண்ட்பை நேரத்தை வழங்குகிறது. இது இன்-இயர் டிடெக்ஷன் உடன் EQ மோட் அம்சத்தை கொண்டுள்ளது. இது கேமர்களுக்காக 60ms அல்ட்ரா லோ-லேடன்சி ஆதரவை (ultra-low latency) வழங்குகிறது. இதன் அசல் விலை இந்தியாவில் ரூ. 5999 என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
அர்பன் ஸ்மார்ட் TWS இயர்பட்ஸ் விலை:
ஆனால், அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக இந்த URBAN Smart TWS Earbuds சாதனம் இப்போது ரூ. 2499 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இது இப்போது ஆன்லைன் ஷாப்பிங் தளம், பிக் சி மொபைல்ஸ், பை இன்டர்நேஷனல், பூர்விகா அப்பிளியன்ஸ் மற்றும் சங்கீதா மொபைல்ஸ் போன்ற கடைகள் வழியாகவும் வாங்க கிடைக்கிறது. இது 1 வருட வாரன்டி உடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








