Home
Gadgets

இனி போனுக்கு வேலை இருக்காது.. கையை நீட்டி பேமன்ட் செய்யலாம்.. மிரட்டலான ஸ்மார்ட் ரிங் அறிமுகம்.. என்ன விலை?

இந்தியாவில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் ரிங் மாடல்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதாவது போட், நாய்ஸ் போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட் ரிங் மாடல்களை அறிமுகம் செய்து வந்தன. இந்நிலையில் செவன் (7) எனும் நிறுவனம் புதிய ஸ்மாரட் ரிங் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

செவன் நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் 7 ரிங் கான்டாக்ட்லெஸ் பேமன்ட் செய்யும் வசதியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதுபோன்ற புதிய தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் ரிங் குறித்து சற்று விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

கையை நீட்டி பேமன்ட் செய்யலாம்.. மிரட்டலான ஸ்மார்ட் ரிங் அறிமுகம்..

அதாவது செவன் நிறுவனத்தின் புதிய 7 ரிங் (7 Ring)-ஐ மெதுவாக தட்டினாலே பேமண்ட் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்தில் அதிநவீன என்எப்சி (NFC) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் ரிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அனைவருக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில் இந்த ஸ்மார்ட் ரிங் ஏழுவித அளவுகளில் கிடைக்கிறது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது செவன் நிறுவனம். பின்பு இந்த 7 ரிங் சார்ந்த அம்சங்களை இயக்குவதற்காக பிரத்யேக செயலி (ஆப்) ஒன்று வழங்கப்படுகிறது.

இந்த செயலி பணப் பரிமாற்றங்களைப் பாதுகாப்பாகவும், மிகவும் எளிமையாகவும் மாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை பயன்படுத்துவது எப்படி என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1: அதாவது 7 ரிங் என்எப்சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சர்வதேச பேமன்ட் வழிமுறைகளில் பணப்பரிமாற்றம் செய்கிறது. எனவே இதற்காக முதலில் ஸ்மார்ட் ரிங்-ஐ செட்டப் செய்ய வேண்டும்.

வழிமுறை-2: அடுத்து பயனரின் வங்கி கணக்கில் இருந்து கணிசமான தொகையை அதில் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு ப்ரீபெய்ட் வாலெட்டில் சேர்க்கப்பட்ட தொகையை முதற்கட்ட வெரிஃபிகேஷன் நிறைவுக்குப் பிறகு செலவு செய்ய முடியும். இருந்தபோதிலும் இதற்கான வரம்பு மாதத்திற்கு ரூ.10,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வழிமுறை-3: அதன்பிறகு வீடியோ கே.ஒய்.சி (KYC)வழிமுறையை நிறைவு செய்த பிறகு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையிலான தொகையை ஸ்மார்ட் ரிங் வாலெட்டில் சேமித்துவைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட் ரிங் உடன் வரும் பிரத்யேக செயலியை கொண்டு பணப் பரிமாற்றங்களைச் சரிபார்க்கவும், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தவும், தொலைந்து போன ரிங்-ஐ பிளாக் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-4: குறிப்பாக ஸ்மார்ட் ரிங் மூலம் பணம் செலுத்துவதற்கு பேமன்ட் இயந்திரத்தின் அருகில் ரிங் அணிந்திருக்கும் கையை கொண்டுவர வேண்டும். இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பிற்காகக் கைவிரல்களை மூடியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கைவிரல் நீண்டிருந்தால் பணம் அனுப்ப முடியாது என்று கூறப்படுகிறது.

கையை நீட்டி பேமன்ட் செய்யலாம்.. மிரட்டலான ஸ்மார்ட் ரிங் அறிமுகம்..

வழிமுறை-5: பேமன்ட் இயந்திரம் ரிங்-க்கு சக்தியூட்டும். இதனால் அதனை சார்ஜ் செய்ய வேண்டாம். அதேபோல் இது ப்ளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த புதிய வகை ஸ்மார்ட் ரிங் கொண்டு இந்தியாவில் உள்ள யுபிஐ மூலம் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். ஆனாலும் இந்த புதிய ரிங் ஆன்லைன் பேமன்ட் மற்றும் இந்தியாவுக்கு வெளியில் பேமன்ட் சேவைகளை சப்போர்ட் செய்யாது என்று கூறப்படுகிறது.

செவன் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய 7 ஸ்மார்ட் ரிங் மாடலின் விலை ரூ.7000-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இதை ரூ.4,777 விலையில் வாங்க முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதற்கான வாரண்டி ஒரு வருடம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே 7 ரிங் வைத்திருக்கும் பயனர்கள் வழங்கும் இன்வைட் மூலமாக இதனை வாங்கிட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indias First Contactless Payment 7 Ring Launched: check price, specifications, availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X