Home
Gadgets

வெறும் ரூ.899 இயர்பட்ஸில் AI அம்சம்.. 45 மணிநேர பிளேபேக்.. பட்டையை கிளப்பும் இந்திய கம்பெனி!

பட்ஜெட் விலையில் ஒரு நல்ல டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸை (TWS Earbuds) வாங்க வேண்டும் என்கிற யோசனை உங்களிடம் இருந்தால் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். உள்நாட்டு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிட்ரான் (Ptron) வெறும் ரூ.899 க்கு நம்பமுடியாத இயர்பட்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

பிட்ரான் பிளேபட்ஸ் 2 (Ptron Playbuds 2) என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ், இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் கேமிங் ஆடியோ தயாரிப்புகளில் ஒன்றாகும். பிட்ரான் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த புதிய கேமிங் இயர்பட்ஸ் ஆனது சிறந்த கேமிங் அனுபவத்தையும், 45 மணிநேர பிளே டைமையும் வழங்கும்.

வெறும் ரூ.899 இயர்பட்ஸில் AI அம்சம்.. பட்டையை கிளப்பும் இந்திய கம்பெனி

ஆப்ட்சென்ஸ் 40 எம்எஸ் லோ லேடன்ஸி (AptSense 40ms Low Latency) அம்சத்துடன் வரும் பிட்ரான் பிளேபட்ஸ் 2 டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் ஆனது மொபைல் போன்களில் மட்டுமின்றி பிசிக்களிலும் (PC) தரமான கேமிங் ஆடியோ செயல்திறனை வழங்கும் என்று பிட்ரான் நிறுவனம் உறுதியளிக்கிறது.

பிட்ரான் பிளேபட்ஸ் 2-வின் அசல் விலை, ஆஃபர் விலை மற்றும் விற்பனை: ரூ.899 என்பது பிட்ரான் பிளேபட்ஸ் 2 இயர்பட்ஸின் ஆஃபர் விலை ஆகும். இந்த இயர்பட்ஸின் அசல் விலை ரூ.1299 ஆகும். இருப்பினும் தற்போது இது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக ரூ.899 என்கிற அறிமுக விலையில் கிடைக்கிறது.

1 வருட வாரண்டியும், முக்கிய அம்சங்களும்: பிட்ரான் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸ் ஆனது 1 வருட உத்தரவாதத்துடன் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பிளேபட்ஸ் 2-வின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் இது செயற்கை நுண்ணறிவை (Artificial intelligence) அடிப்படையாக கொண்ட என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) உடன் வருகிறது.

ட்ரூடால்க் (TruTalk) தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இந்த இயர்பட்ஸ் ஆனது மேம்பட்ட ஆடியோ அனுபவத்தையும் வழங்கு ஆப்ட்சென்ஸ் 40எம்எஸ் லோ லேடன்ஸி (AptSense 40ms Low Latency) அம்சத்தையும் கொண்டுள்ளது. இது கேமிங்கின் போது அதிவேகமான மற்றும் ஒலியியல் மிக்க ஆடியோ அனுபவத்தை வழங்குமென்று பிட்ரான் கூறுகிறது.

ஒவ்வொரு இயர்பட்டும் ஆழமான பாஸ் (Deeper bass) மற்றும் உயர் ஒலி தரத்தை (High sound quality) வழங்குவதாகவும் பிட்ரான் நிறுவனம் உறுதியளிக்கிறது. கேமிங் மற்றும் அழைப்புகளுக்கு இடையில் மாறுவதற்காக இந்த இயர்பட்களில் மல்டி ஃபங்க்ஷன் டச் கன்ட்ரோலுக்கான (Multi-function touch control) ஆதரவும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இந்த இயர்பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 45 மணிநேரம் வரையிலான பிளேபேக் டைம் (Playback time) கிடைக்குமென்று பிட்ரான் உறுதியளிக்கிறது. கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, மேம்படுத்தப்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்க 13 மிமீ டைனமிக் பாஸ் பூஸ்ட் டிரைவர்கள் (13mm Dynamic Bass Boost Drivers) மற்றும் ப்ளூடூத் 5.3 டிரான்ஸ்மிஷனை (Bluetooth 5.3 Transmission) கொண்டுள்ளன.

பிட்ரான் நிறுவனத்தின்படி இந்த இயர்பட்ஸ் நீண்ட நேர கேமிங் அமர்வுகளுக்கு ஏற்றது. இதன் கீழ், அனைத்து வகையான கேமர்களுமே பிரீமியம் வயர்லெஸ் கேமிங் ஆடியோ மற்றும் நிகரற்ற சௌகரியத்தின் அனைத்து நன்மைகளையும் அனுபவிக்க முடியும். மேலும் (பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் வந்தாலும் கூட) இந்த இயர்பட்ஸ் சிறப்பான வடிவமைப்பை பெற்றுள்ளன".

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Company Ptron Launched Playbuds 2 TWS Earbuds with Artificial intelligence ENC For Rs 899
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X