மாஸ் காட்றான்யா.. வெறும் ரூ.1199-க்கு பல ஸ்மார்ட் வாட்ச்களின் கதையை முடித்த இந்திய கம்பெனி!
ரூ.2000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட் வாட்சுகளானது (Smartwatch) சுமாரான அம்சங்களையே பேக் செய்கின்றன. அந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி, இந்திய நிறுவனமான பிட்ரான் (pTron) ஒரு தரமான பட்ஜெட்-விலை ஸ்மார்ட் வாட்ச்சை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
பலவிதமான ஆக்சஸெரீஸ்களை (Accessories) தயாரிப்பதற்கு பெயர்போன இந்திய பிராண்ட் ஆன பிட்ரான், அதம் ஃபோர்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (Force Smartwatch) சீரீஸின் கீழ் எக்ஸ்12என் (X12N0 என்கிற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இளைய சமுதாயத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் விலையை மீறிய சில அம்சங்களை வழங்குகிறது.

pTron Force X12N ஸ்மார்ட்வாட்ச்: அசல் விலை & ஆபர் விலை
பிட்ரான் ஃபோர்ஸ் எக்ஸ்12என் ஸ்மார்ட்வாட்ச்சின் அசல் விலை ரூ.1499 ஆகும். ஆனால் இது அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக வெறும் ரூ.1,199 க்கு வாங்க கிடைக்கும். ஒரு வருட வாரண்டியுடன் வரும் இந்த ஸ்மார்ட்வாட்ச், பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) வழியாக விற்பனை செய்யப்படுகிறது.
pTron Force X12N ஸ்மார்ட்வாட்ச்: கலர் ஆப்ஷன்ஸ்
பிட்ரானின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்: பிளேசிங் ப்ளூ (Blazing Blue), கோல்ட் பிளாக் (Gold Black), கார்பன் பிளாக் (Carbon Black) மற்றும் ஷாம்பெயின் பிங்க் (Champagne Pink); மற்றும் இந்த 4 கலர் ஆப்ஷன்களுமே இன்டர்சேன்ஜபிள் ஸ்டராப்ஸ் (Interchangeable straps) உடன் வருகின்றன.
pTron Force X12N ஸ்மார்ட்வாட்ச்: அம்சங்கள்
ஃபோர்ஸ் எக்ஸ்12என் மாடலானது அலாய் மெட்டல் கேஸிங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட கடினமான மற்றும் அதே சமயம் மிகவும் எடை குறைவான ஒரு ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இது சற்றே பெரிய, செவ்வக வடிவிலான 1.85-இன்ச் எச்டி டிஸ்பிளேவுடன் வருகிறது; மேலும் இதுவொரு ஃபுல்-டச் 2.5டி கர்வ்டு (Curved Display) டிஸ்பிளேவாகும்!
இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் மென்மையான சிலிகான் பேண்ட், மிகவும் வசதியான அனுபவத்தை வழங்குவதோடு சேர்த்து நாகரீகமான தோற்றத்தையும் வழங்குகிறது. பிட்ரான் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த வாட்ச்சை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 5 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை (Battery Life) வழங்கும்.
பிட்ரான் ஃபோர்ஸ் எக்ஸ்12என் ஸ்மார்ட்வாட்ச்சில் - ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart rate monitor), சுவாச பயிற்சிகள் (Breathing exercises), ஸ்லீப் ட்ராக்கர் (Sleep Tracker), எஸ்பிஓ2 மானிட்டர் (SPO2 Monitor) மற்றும் டெய்லி ஆக்டிவிட்டி மானிட்டர் என - உங்களுடைய உடல்நலன்களை கண்காணிக்கும் பலவகையான ட்ராக்கர்களும் உள்ளன.
மொத்தம் 130 க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் பல வகையான ஸ்போர்ஸ் மோட்கள் உள்ளன. கூடுதலாக இதில் ப்ளூடூத் 5.0-விற்கான ஆதரவும் உள்ளது. இது இன்கம்மிங் அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் சோஷியல் மீடியா அலெர்ட்களை பெற அனுமதிக்கிறது. இது ப்ளூடூத் வழியாக ம்யூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல்களையும் வழங்கும்!


Click it and Unblock the Notifications