திடீரென மேப்பிங் செய்யும் பணியில் 300 ட்ரோன்கள்: காரணம் இதுதான்.!

|

யூஏவி (மனிதன் இல்லாத ஏரியல் வாகனம்) என்று அறியப்படும் ட்ரோன்கள் என்பவை, ஒரு ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இயக்கக் கூடிய ஒரு ஏர்கிராஃப்ட் ஆகும். குறிப்பாக ட்ரோன்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.

 ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு

குறிப்பாக உங்கள் ஸ்மார்ட்போன் டேப்லெட்டில், அப்ளிகேஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ட்ரோன்களை இயக்க முடியும். சில ட்ரோன்கள் பறக்கும் போதே,புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும் என்பதோடு, ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஃபோன்களை ஆதரிக்கிறது.

300 ட்ரோன்கள்

300 ட்ரோன்கள்

இந்நிலையில் வரலாற்று ரீதியாக நாட்டை மேப்பிங் செய்யும் பணியில் 300 ட்ரோன்கள் ஈடுபட உள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது, அதைப் பற்றிய முழுமையான தகவலைப் பார்ப்போம்.

2,100 ஆண்டு பழமையான 'ஐபோன்' போன்ற பொருள் பெண்ணின் எழும்புக்கூடுடன் கண்டுபிடிப்பு! - வீடியோ

டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது

டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது

இந்தியாவின் பழமையான விஞ்ஞானதுறை மற்றும் சர்வே ஆப் இந்தியா ஆகியவை இணைந்து நிலப்பரப்புகளை டிஜிட்டல் மயமாக்கலை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாட்டின் 75சதவிகிதம் நிலபரப்பை டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது.

 கர்நாடகா, மகாராஷ்டிரா

கர்நாடகா, மகாராஷ்டிரா

தற்சமயம் இந்த திட்டத்திற்கு வேண்டி அரியான மாநிலத்தில் 6மாவட்டங்கள், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா இரண்டு மாவட்டங்களில் ட்ரோன் அடிப்படையில் மேப்பிங் பயிற்சிகளை மேற்கொள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

ஆஸ்திரேலியர்களும் தமிழர்களே அடித்த கூறும் அறிவியல் ஆதாரங்கள்!

 சுமார் 400 முதல் 500கோடி வரை

சுமார் 400 முதல் 500கோடி வரை

இந்த மேப்பிங் செய்யும் திட்டத்திற்கு சுமார் 400 முதல் 500கோடி வரையில் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இதுகுறித்து சர்வே ஆப் இந்தியாவின் இயக்குனர் ஜெனரல் கிரிஷ்குமார் கூறுகையில், மேப்பிங் நோக்கங்களுக்காக நாங்கள் முன்னர் வான்வழி புகைப்படத்தை பயன்படுத்தினோம், ஆனால் அது விலை உயர்ந்தது.

துல்லியமான வரை படங்கள்

துல்லியமான வரை படங்கள்

அதே நேரத்தில் புதிய ட்ரோன்களை பயன்படுத்த இது சரியான நேரம், மேலும் மேப்பிங் மூலம் துல்லியமான வரை படங்கள் கிடைப்பதன் மூலம் கிராம மக்கள் சொத்து அடையாளங்களையும், தங்களின் நிலங்களுக்கு முறையான சட்டப் பட்டங்களை பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
India to Use 300 Drones for High-resolution mapping: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X