பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!

|

என்னதான் India Vs China என்கிற பஞ்சாயத்து அடிக்கடி நடந்தாலும் கூட, கண்ணை மூடிக்கிட்டு சொல்லலாம் - 100 க்கு 95 இந்தியர்களின் கையில் ஒரு சைனீஸ் போன் (Chinese Phone) தான் இருக்கும் என்று!

அதாவது ஒன்பிளஸ், சியோமி, ரெட்மி, போக்கோ, ஒப்போ, விவோ, ரியல்மி, லெனோவா, ஐக்யூ, ஹூவாய், டிசிஎல் போன்ற சீன பிராண்டின் ஏதோவொரு மொபைல் போன் தான் இருக்கும்!

இந்தியாவை

இந்தியாவை "ஆளும்" சைனீஸ் ஸ்மார்ட்போன்கள்!

இந்தியாவிற்கே சொந்தமான, சில நல்ல மொபைல் பிராண்டுகள் இங்கே இருந்தாலும் கூட, சீன நிறுவனங்கள் "செட் செய்யும்" விலை நிர்ணயம் மற்றும் அந்தந்த பட்ஜெட்டிற்குள் அவர்கள் கொடுக்கும் அம்சங்கள் மற்றும் எக்கச்சக்கமான மாடல்கள் இருக்கிறதே? அடடா!

இந்திய நிறுவனங்களால் "அதை" தாக்குபிடிக்கவே முடியவில்லை! இதுபோன்ற காரணங்களின் அடிப்படையில் தான் - சீன நிறுவனங்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆட்சி செய்கின்றனர்!

IRCTC டிப்ஸ்: அடச்சே! இவ்ளோ நாள் இது தெரியாம.. ரயில்ல பயணிச்சி இருக்கோமே!IRCTC டிப்ஸ்: அடச்சே! இவ்ளோ நாள் இது தெரியாம.. ரயில்ல பயணிச்சி இருக்கோமே!

இந்த கதை மொபைல் சந்தையில் மட்டும் நடக்கவில்லை!

இந்த கதை மொபைல் சந்தையில் மட்டும் நடக்கவில்லை!

சீன நிறுவங்களின் "ஆதிக்கம்" ஸ்மார்ட்போன் சந்தையில் மட்டுமல்ல, ஸ்மார்ட் டிவி, லேப்டாப் போன்ற சந்தைகளிலும் தொடர்கிறது.

இந்நிலைப்பாட்டில் தான், எந்த திட்டங்களையும் தீட்டாமல், பெரிய அளவிலான மூலோபாயங்களை கட்டவிழ்த்து விடமால், இந்தியா சைலன்ட் ஆக ஒரு சம்பவத்தை செய்து உள்ளது.

அதென்ன சம்பவம்?

அதென்ன சம்பவம்?

"அந்த சம்பவம்" உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் நடந்துள்ளது!

கவுன்டர்பாயிண்ட் ரிசர்ச் (Counterpoint Research) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவல்களின்படி, இந்தியாவின் ஸ்மார்ட்வாட்ச் சந்தை ஆனது YoY (Year-Over-Year) அடிப்படையில் 300% மேல் அதிகரித்து, சீனாவை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

பதட்டத்தில் Windows பயனர்கள்.. அடிச்சி புடிச்சி Uninstall பண்றாங்க! ஏன்?பதட்டத்தில் Windows பயனர்கள்.. அடிச்சி புடிச்சி Uninstall பண்றாங்க! ஏன்?

என்ட்ரி-லெவல் பிராண்டுகள் சேர்ந்து சீனாவிற்கு வைத்த வேட்டு!

என்ட்ரி-லெவல் பிராண்டுகள் சேர்ந்து சீனாவிற்கு வைத்த வேட்டு!

கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் இணை இயக்குனர் சுஜியோங் லிம்மின் கருத்துப்படி, உலகளாவிய ஸ்மார்ட் வாட்ச் சந்தையில், இந்தியாவை முன்னெடுத்து சென்றதும், சீனாவை பின்னுக்கு தள்ளியதும் - நுழைவு நிலை (Entry Level) பிராண்டுகள் தானாம்!

விலை கம்மி.. விற்பனை அதிகம்.. இந்த லாஜிக் ரொம்ப ஈஸி!

விலை கம்மி.. விற்பனை அதிகம்.. இந்த லாஜிக் ரொம்ப ஈஸி!

"இந்த காலாண்டில், இந்திய சந்தைக்கு வந்த 30% ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் ஆனது, 50 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில் தான் விற்பனை செய்யப்பட்டன.

முக்கியமாக உள்ளூர் பிராண்டுகள், தேவையான அம்சங்களுடன் விலை குறைந்த மாடல்களை அறிமுகப்படுத்தியது. அதுவே நுகர்வோர்களை ஈர்த்தது" என்று லிம் கூறி உள்ளார்!

Camera Phone-னு வாங்குனா இதை வாங்கணும்; இல்லனா போட்டோவே எடுக்க கூடாது!Camera Phone-னு வாங்குனா இதை வாங்கணும்; இல்லனா போட்டோவே எடுக்க கூடாது!

ஏற்கனவே சீனாவில் வாய்க்கால் தகராறு!

ஏற்கனவே சீனாவில் வாய்க்கால் தகராறு!

சீனாவில் நிலவும் பொருளாதார மந்தநிலையின் காரணமாக, முக்கிய சீன பிராண்டுகளான Huawei, imoo மற்றும் Amazfit போன்றவைகள் குறைந்த அளவான வளர்ச்சியையே கண்டுள்ளன.

முந்தைய காலாண்டில் இரண்டாவது இடத்தில் இருந்த சீனா, கோவிட்-19 லாக்டவுன்கள் மற்றும் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, அதன் ஏற்றுமதியில் 10% வீழ்ச்சியை சந்தித்து, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போரினால்?

ரஷ்யா - உக்ரைன் போரினால்?

மேலும், முந்தைய காலாண்டில் மூன்றாவது இடத்தில் இருந்த ஐரோப்பா, ரஷ்யா - உக்ரைனுக்கு இடையே நடந்த போரின் விளைவாக, 13% சரிவை சந்தித்து, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது!

மேற்கண்ட காரணங்கள் எல்லாம் ஒன்றுகூடி, இந்தியாவின் ஸ்மார்ட்வாட்ச் சந்தையை "அப்படியே மேல் நோக்கி கொண்டு சென்றுள்ளது" என்பது வெளிப்படை!

ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் உயிரோட இருந்து.. இதை பார்த்து இருந்தா? எப்படி இருக்கும்?ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் உயிரோட இருந்து.. இதை பார்த்து இருந்தா? எப்படி இருக்கும்?

எந்தெந்த இந்திய பிராண்டுகள் வளர்ச்சியை கண்டுள்ளன?

எந்தெந்த இந்திய பிராண்டுகள் வளர்ச்சியை கண்டுள்ளன?

இந்திய பிராண்டுகளான Fire-Boltt மற்றும் Noise ஆனது நல்ல லாபங்களை ஈட்டியுள்ளது. நினைவூட்டும் வண்ணம், இந்த 2 நிறுவனங்களுமே, கடந்த ஆண்டு எந்த விதமான "வளர்ச்சி பட்டியலும்" இடம்பெறவில்லை!

ஆனால் தற்போது கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, ஃபயர்-போல்ட் நிறுவனமானது இந்தியாவில் ஒரு முதன்மையான பிராண்ட் ஆக உருமாறி உள்ளது, அதேசமயம் நாய்ஸ் நிறுவனமானது 298% வளர்ச்சியடைந்து, இந்தியாவின் இரண்டாவது பெரிய பிராண்டாக உருமாறி உள்ளது.

Best Mobiles in India

English summary
India beats China and becomes Second Largest Smartwatch Market Worldwide For the First Time

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X