Independence Day sale: ஸ்மார்ட் டிவிகளுக்கு அசத்தலான தள்ளுபடி அறிவிப்பு.!
சுதந்திர தினத்தையொட்டி பல முன்னணி ஆன்லைன் தளங்களில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் Big Saving Days sale எனும் சிறப்பு விற்பனையும் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்
எனவே இப்போதே சலுகை விலையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், வாஷிங் மெஷின்கள் போன்ற அனைத்து சாதனங்களையும் வாங்குவதுநல்லது. அதேபோல் இப்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1.ரெட்மி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி
அமேசான் தளத்தில் தற்போது ரெட்மி 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதுஇந்த ஸ்மார்ட் டிவி மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 1366 x 768 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1ஜிபி ரேம், 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்றபல அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்.

2.ஒன்பிளஸ் 32Y1S
அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 32 Y1S மாடலுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட் டிவியை தற்போதுரூ.14,999-விலையில் வாங்கமுடியும்.
குறிப்பாக 64-பிட் பவர்ஃபுல் பிராஸசர், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், 1366x768 பிக்சல்ஸ், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ மற்றும்பல அசத்தலான சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.

3.VW (VW32S) ஸ்மார்ட் டிவி
VW நிறுவனத்தின் VW32S ஸ்மார்ட் டிவிக்கு 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.7,777-விலையில்
வாங்க முடியும். குறிப்பாக வைஃபை, ஆண்ட்ராய்டு OS, ஸ்க்ரீன் மிரரிங், பிசி கனெக்டிவிட்டி, வயர்லெஸ் ஹெட்ஃபோன் கண்ட்ரோல் போன்றஅட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது
மேலும் 1366x768 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது
இந்த அட்டகாசமான VW ஸ்மார்ட் டிவி.

4. சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ
32-இன்ச் கொண்ட சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடலை அமேசான் தளத்தில் ரு.13,999-விலையில் வாங்க முடியும். இந்த சியோமி ஸ்மார்ட் டிவி1366 x 768 பிக்சல்ஸ்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், vivid picture engine மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ அம்சங்கள்
கார்டெக்ஸ் ஏ35 64-பிட் குவாட்-கோர் பிராசஸர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த 32-இன்ச் கொண்ட சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடல். மேலும் 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் போன்ற சிறப்பானஅம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி.

5.ஒன்பிளஸ் 43Y1
43-இன்ச் கொண்ட ஒன்பிளஸ் 43Y1 ஸ்மார்ட் டிவிக்கு அமேசான் தளத்தில் 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்
டிவியை தற்போது ரூ.22,999-விலையில் வாங்க முடியும்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 1920x1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளம், 64-பிட் பவர்ஃபுல் பிராஸசர்,20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

6.ரெட்மி ஓ50
50-இன்ச் கொண்ட ரெட்மி X50 ஸ்மார்ட் டிவி மாடலுக்கு அமேசான் தளத்தில் 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இந்த ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.32,999-விலையில் வாங்க முடியும்.
4கே அல்ட்ரா எச்டி ஆதரவு, 3840 x 2160 பிக்சல்ஸ், 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் ஆதரவு, ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளம், டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0 மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி X50 ஸ்மார்ட் டிவி.

7.சாம்சங் ஸ்மார்ட் டிவி
32-இன்ச் கொண்ட சாம்சங் Wondertainment ஸ்மார்ட் டிவி (UA32T4340BKXXL) மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,989-விலையில் வாங்க முடியும்.இந்த சாம்சங் டிவி 1366×768 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவுடன் 20 வாட்ஸ் ஸ்பீக்கர் ஆதரவு, அமேசான் அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் போன்ற ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.
மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி.

8.ஏசர் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி
ஏசர் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி(AR55AR2851UDFL) மாடலுக்கு தற்போது 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்
டிவியை தற்போது ரூ.34,990-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
4கே அல்ட்ரா எச்டி ஆதரவு, 3840x2160 பிக்சல்ஸ், டூயல் பேண்ட் வைஃபை ஆதரவு, 2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன்வெளிவந்துள்ளது இந்த 55-இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவி.


Click it and Unblock the Notifications