சாம்சங் திருவிழா : மலேசியாவில் இருந்து பிரத்யேக தொகுப்பு.!!

By Meganathan
|

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், கடந்த வாரம் தனது புதிய கருவிகளை மலேசியாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. தமிழில் முதல் முறையாக மலேசியா விழாவில் சாம்சங் நிறுவனம் வெளியிட்ட கருவிகளின் தலைசிறந்த டாப் 10 கருவிகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

SUHD TV

SUHD TV

SUHD தொழில்நுட்பம் கொண்ட தொலைகாட்சிகளின் புதிய மாடல் தொலைகாட்சியை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. முற்றிலும் எச்டி தரம் கொண்ட வீடியோக்களை ப்ளே செய்யும் திறன் கொண்ட இந்த டிவி வகைகள் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங்

சாம்சங்

நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டேப்ளெட் கருவியில் இன்டெல் கோர் எஸ் எஸ்ஓசி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 12 இன்ச் திரை, 4 ஜிபி ரேம், 5 எம்பி கேமரா மற்றும் 5200 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

கம்ப்ரஸ்ஸர்

கம்ப்ரஸ்ஸர்

டைரக்ட் கூல் சிங்கிள் டோர் குளிர்சாதன பெட்டிகள், டிஜிட்டல் இன்வர்ட்டர் கம்ப்ரஸ்ஸர் மற்றும் ஸ்மார்ட் கனெக்ட் இன்வர்ட்டர் போன்றவைகளை அறிமுகம் செய்தது. டிஜிட்டல் இன்வர்ட்டர் கம்ப்ரஸ்ஸர் குளிர்சாதன பெட்டியின் வாழ்நாளை நீட்டிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங்

சாம்சங்

ஒரு வழியாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ சீரிஸ் போன்களை வெளியிட்டு விட்டது. முற்றிலும் கிளாஸ் மற்றும் மெட்டல் வடிவமைப்பு கொண்ட கருவியில் மேம்படுத்தப்பட்ட கேமரா, பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளன.

சாம்சங்

சாம்சங்

இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கும் சாம்சங் கியர் எஸ்2 கிளாசிக் கியர் எஸ2 கொண்டிருந்த பெரும்பாலான சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றது எனலாம்.

சாம்சங்

சாம்சங்

9 மற்றும் 11 கிலோ எடை கொள்ளலவு கொண்ட சலவை இயந்திரங்களை சாம்சங் நிறுவனம் இவ்விழாழில் அறிமுகம் செய்தது.

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டி

ட்வின் கூலிங் ப்ளஸ் தொழில்நுட்பம் கொண்ட இந்த குளிர்சாதன பெட்டி நவீன கால ஸ்மார்ட் குளிர்சாதன பெட்டி என்றும் சொல்லும் அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பீக்கர்

ஸ்பீக்கர்

சாம்சங் R7 360 வயர்லெஸ் ஸ்பீக்கர் வகைகள் சாம்சங் நிறுவனத்தின் ரிங் ரேடியேட்டர் தொழில்நுட்பத்தை கொண்டு அனைத்து திசைகளிலும் ஒலியை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றது.

வீடியோ வால்

வீடியோ வால்

உலகின் மெல்லிய வீடியோ வால் என அழைக்கப்படும் இந்த கருவி முற்றிலும் தாணியங்கி முறையில் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Important Gadgets Showcased at Samsung Forum 2016 in Malaysia Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X